தட்டுயில்லா பிச்சைக்காரர்கள் ..!!


குறிப்பு : நாட்டில் பாத்திரம் ஏந்தும் சில பாத்திரங்கள் பற்றிய ஒரு தொகுப்பு ,
இது யார் மனதையும் புண்படுத்துமாறு அமைந்தால் – மன்னியுங்கள் ,

(இது ஒரு சில மனித பூச்சிகளை பற்றி மட்டும் , நீங்கள் பூச்சி என்றால் ஆவேசப்படவும்)

நன்றி ,
சிறுவயது முதல் பிச்சைக்காரர்களின் – அடையாளமாய் ,
மனதில் பதிந்த உருவம் இன்று உருமாறியது ,

என்றும் தட்டு ஏந்தி திரியும் பிச்சைக்காரர்கள் – இன்று ,
நாகரிகமுற்றனரோ என்று வியக்கும் படி உள்ளது – இன்றைய ,
தட்டுயில்லா பிச்சைக்காரர்களின் அணுகுமுறை ,

— முதலில் இவர்தாம் ,
பெயர் தான் காவலாளி – ஆனால் ,
உண்மையில் களவானி ,
தெருக் கோடியில் நிற்கும் – ஒரு பேடி ,

காலம் தவறாமல் வேலை செய்வதுண்டு ,
காவல் கடமையில் சிறக்க அல்ல ,
மக்கள் உடைமைகளை சட்டம் சொல்லி பறிக்க ,

கடற்கறையிலும் பூங்காவிலும் தெருவிலும் – இப்படி ,
கை ஏந்தா இடமில்லை – உன்மை பிச்சைக்காரரை காட்டிலும் ,
இன்று மிகுந்த நிலை – இவர்களுக்கு ,

— இரண்டாம் நிலையில் – உள்ளதை ,
ஊக்கமாய் கொண்டு – முதல் நிலைக்கு ,
முயற்சி செய்யும் கும்பல் – இது ,

கூட்டம் கூட்டமாய் வந்து – நம்மை ,
மோசம் செய்து – நம் ஓட்டை வாங்கி – பின் ,
ஓட்டம் இடும் கயவ கும்பல் ,

ஐந்து ஆண்டு திட்டத்தில் – ஐந்து முறை கூட ,
ஓட்டு போட்டவரை பார்க்காத – நம் ,
ஜனநாயகத்தின் நாயகர்கள் இவர்கள் ,

ஒரு ஓட்டுக்கு ஓர் ஆயிரம் என – நாம் ,
செய்த சிறு தவறினால் – நம் ,
வீட்டின் கூரையையும் இவன் – சூறையாடுகிறான் ,

வேண்டாம் இனி ,
இந்த வெள்ளை வேட்டி அணிந்த – கோட்டை ,
பிச்சைக்காரர்கள் ,

— ஒருவன் முற்றும் பெறும் இடம் – இது ,
ஆதலாலே இதற்கு மூன்றாம் இடம் ,

நீ அள்ளி தந்தால் – நான் ,
கல்வி தருவேன் – இல்லையேல் ,
தள்ளி விடுவேன் – எனும் ,
பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகமே ,

பிச்சைக்காரர் பிள்ளை பயில வந்தாலும் – அவர்களிடம் ,
பிச்சை எடுக்கும் உங்கள் எச்சி குணம் – என்று ,
மாறும் ,
அந்த மாற்றம் வரும் வரை – இங்கு ,
டீ கடை பையணும் – டேபிள் பாயும் (boyum) ,
வேலை ஒய்வு பெற்று – கல்வி ,
தாகம் தீர மாட்டார்கள் ,

— நான்காம் நிலை பெற – தகுதியுற்றவன் ,
ஆன்மீகம் எனும் புனிதத்தை புதைத்தவன் – இவன் ,

ஆம் ,
நம் ஆன்மீக நம்பிக்கையை கொண்டு – நம்முள் ,
நயவஞ்சகமாய் வந்த ஒரு நச்சு – இவன் ,

அடே – போலி சாமிகளே ,
காவியில் பாவம் செய்யும் பாவிகளே – கேளுங்கள் ,

எங்கள் அமைதி தான் உங்களின் அனுமதி – அதை ,
வெகுமதியாய் கொண்டு – வந்த வழி ,
ஓடி விடுங்கள் – இல்லையேல் எங்கள் ,
நாளைய சமுதாயம் – உங்கள் ,
தலை முடியை பிடித்து மரியாதை செய்யும் – புரிந்துகொள் ,

கடைசி இடம் இது – ஒரு ,
பரதேசி கூட்டம் ,

பரதேசி என்பதால் – செல்வம் இல்லாதவன் என்றில்லை ,
இறை குடுத்த அனைத்து தச்சனைகளையும் வாங்கி – பின் ,
வரதட்சனைக்கு ஏங்கும் கூட்டம் தான் ,

உழைக்க வக்கில்லா – சிலர் ,
தேடுவது ஒரு – மலர் (பெண்) ,
காரணம் ,
அந்த மலர் வளர்ந்த செடியின் (பெண்ணின் அப்பா) செழிப்பை ,
வேரோடு வேறு இடம் மாற்றும் மனம் கொண்டு ,

இந்த மனம் கொண்ட அந்த சிலர் – மாறினால் தான் ,
இரண்டு மணம் ஒன்றுசேரும் அந்த தருணம் – ஒரு ,
உண்மை திரு – மணம் என்போம் ,

உதவ கரங்கள் உள்ளதை மறந்து ,
உதவாக்கரங்களாய் திரியும் – இந்த ,
யாசிக்க யோசிக்கா கரங்கள் – வேண்டாம் ,
இனியாவது – மாற்றம் காண்போம் .

– ஜெயராமச்சந்திரன் ர

Source:
http://jrrkavithai.wordpress.com

Advertisements