வாழ்க்கை: வெற்றி தோல்வி


வெற்றி தோல்விகளையும், சாதனை – வேதனைகளையும் கண்டு துவண்டும், மயங்கியும் விடாது இருத்தல் அடுத்த கட்ட நடவடிக்கைக் கும் போராட்டத்துக்கும் பக்க பலமாக பெரிதும் இருக்கும்.


அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.

அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.

Advertisements

சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை


சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை.

அவற்றை கச்சிதமாக உபயோகிப்பவன் அந்த சக்தியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உபயோகிக்கத் தெரியாதவன் எல்லாவற்றையும் தனக்கு பாதகமாக்கிக் கொள்கிறான்.

தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரச்சினைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றன.

எனவே என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை விட அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது அதிக முக்கியமானது.

ஆய்வில் தகவல்: ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி


 

இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மறதி நோய்க்கு தீர்வு காண்பது குறித்து கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பேக்ரெஸ்ட் ரோட்மென் ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.

இந்த ஆய்வின் முடிவு குறித்து ஆய்வுக்குழு தலைவர் மார்க் பெர்மென் கூறியதாவது, இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

போக்குவரத்து நிறைந்த சாலைகள், திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்வதைவிட பூங்காக்களில் நடப்பது சிறந்தது. மன உளைச்சல், மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோதெரபி சிகிச்சை, மருந்துகளுடன் பூங்கா நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார்.

Source:
http://tech.lankasri.com