சிந்தனை..!!


home

 

உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்.. 
உடுத்த உடையிருந்தால்.. 
தலை மேல் கூரையிருந்தால்.. 
உறக்கம் கொள்ள இடமிருந்தால்.. 
உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே !

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்சில் சிறிது சில்லறை இருந்தால்.. 
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே !

நோய், நொடியின்றி, புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புணர்ந்தால்.. 
அதே நாளில் இறக்கப் போகும் கோடி மக்களை விட நீங்கள் அதிகம் ஆரோக்கியமானவரே !

நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்.. 
எந்த வித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்.. 
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடான கோடி மக்களை விட நீங்கள் மகிழ்ச்சியானவர்களே !

மேற்கூறியவைகளை தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம் பெருமைக்குரியவர்களே !!!

Source:
Via Fb (பெரியார்செல்வம்)

Advertisements

ஏலக்காய்வாசனைத் திரவியங்களின் அரசி என்று இதைச் சொல்வார்கள்.
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.

இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

தாது உப்புக்கள் :

ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

மன இறுக்கம் / படபடப்பு :

ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.

இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

புகைப்பழக்கம் – நிக்கோட்டின்:

மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது
கசியும் “நிக்கோட்டின்” நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும்.

“ஏலக்காய்” இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும்
படியாமல் அப்புறப்படுத்துகிறது.

மருத்துவ குணங்கள் :

மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாகவும்,
செரிமானத்தை தூண்டுவதற்க்கும், குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கும்,
மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கும் பயன்படுகிறது.
இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க பல‌ர் சூ‌யி‌ங்க‌ம்(Bubble gum) சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

Source:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)
http://www.grannytherapy.com/tam/2011/05/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/

 

ரௌத்திரம் பழகு !!


சிதையா நெஞ்சுகொள்
செய்வது துணிந்து செய்
தீயோர்க் கஞ்சேல்
தொன்மைக் கஞ்சேல்
நேர்படப் பேசு
கொடுமையை எதிர்த்து நில்
சாவதற்க் கஞ்சேல்
நையப் புடை
நொந்தது சாகும்
பேய்களுக் கஞ்சேல்
போர்த்தொழில் பழகு.

இவையெல்லாம் கைவர வேண்டுமா …?
ரௌத்திரம் பழகு !! ” என்கிறான் பாரதி.

ரௌத்திரம் என்பது என்ன ?

தனக்கும், கண் முன்னே பிறர்க்கும் இழைக்கப்படும் கொடுமைக்கண்டும் எழாதிருப்பவன் பேடி.
எதிர்க்கும் துணிவின்றி தன்னுள்ளே உழன்று தன்னைத்தானே அழித்துக்கொள்ளச் செய்வது ஆத்திரம் ..சினம்..

அநீதியைக் காணும்பால் பொங்கியெழுந்து தட்டிக் கேட்பதே ரௌத்திரம்!!

ஆத்திரம் அறிவற்றது, விவேகத்துடன் கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரம் !!
ரௌத்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் உயிரணுவிலும் இருக்கவேண்டும். அதிலும் பெண்ணுக்கு ரௌத்திரமேன்பதே உடுக்கை !!

வாழ்க்கை: வெற்றி தோல்வி


வெற்றி தோல்விகளையும், சாதனை – வேதனைகளையும் கண்டு துவண்டும், மயங்கியும் விடாது இருத்தல் அடுத்த கட்ட நடவடிக்கைக் கும் போராட்டத்துக்கும் பக்க பலமாக பெரிதும் இருக்கும்.


அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.

அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.

சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை


சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை.

அவற்றை கச்சிதமாக உபயோகிப்பவன் அந்த சக்தியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உபயோகிக்கத் தெரியாதவன் எல்லாவற்றையும் தனக்கு பாதகமாக்கிக் கொள்கிறான்.

தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரச்சினைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றன.

எனவே என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை விட அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது அதிக முக்கியமானது.

ஆய்வில் தகவல்: ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி


 

இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மறதி நோய்க்கு தீர்வு காண்பது குறித்து கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பேக்ரெஸ்ட் ரோட்மென் ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.

இந்த ஆய்வின் முடிவு குறித்து ஆய்வுக்குழு தலைவர் மார்க் பெர்மென் கூறியதாவது, இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

போக்குவரத்து நிறைந்த சாலைகள், திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்வதைவிட பூங்காக்களில் நடப்பது சிறந்தது. மன உளைச்சல், மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோதெரபி சிகிச்சை, மருந்துகளுடன் பூங்கா நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார்.

Source:
http://tech.lankasri.com

Gallery

குளோபல் வார்மிங் என்பதே பொய்

This gallery contains 3 photos.


உலகம் வெப்ப மயமாதல் (Global Warming) என்பது தற்போது, மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு பாரிய பிரச்சினை. இதற்குக் காரணமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனங்கள் வெளிவிடும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைகிறது என்கிறார்கள். வாகனங்கள் வெளிவிடும் காபனீரொக்சைட் (CO2) என்னும் வாயுவும், மீதேன் (Methene – CH4) … Continue reading