ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..!!


Happy-New-Year-2014-Compact-Font-Vector
ஜனவரி 1, 2012, 2013 (2014)… ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…

இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…?
இதில்தான் ஒரு சந்தேகம்..!
ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும்…
ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்…

தை 1 – தமிழ்ப் புத்தாண்டு
யுஹாதி – தெலுங்குப் புத்தாண்டு
முஹர்ரம் 1 – ஹிஜ்ரிப் புத்தாண்டு
இப்படி பல பல புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன.

குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.

இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.

  • ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
  • பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
  • மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.
  • ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர். (ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) சரி, விடுங்கள்! மேலே படியுங்கள்.
  • மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
  • ஜூன் : ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.
  • ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க…

இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது..

முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.
அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .

இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.

ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது.

ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.

இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும்.

ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது.

கிறிஸ்தவர்களும் இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை..!!

Source:
சமரசம்- ஜன 1-15- 2011 (என்ற கட்டுரையுன் ஒரு பகுதி).

Advertisements

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து



babar_masjith

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

( பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)

கொழுப்பு – கொலஸ்டிரால்


LDL & HDL

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது.

Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது.

சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

கொலஸ்டிரால் இல் இரண்டு வகையுள்ளது

  1. எல்.டி.எல்(LDL) என்ற கெடுதலான கொலஸ்டிரால்
  2. ஹெச்.டி.எல்(HDL) என்ற நல்ல கொலஸ்டிரால்

LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)

ஓடுவது, விளையாடுவது, உடற்பயிர்ச்சி ஆகியவற்றில் ஈடுபடுவதால் எல்.டி.எல்(LDL) என்ற கெடுதலான கொலஸ்டிரால் குறைகிரது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக வாழலாம்.

ஆனால் அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

  • கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.
  • இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.
  • நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.
  • தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

References:
http://udayanadu.wordpress.com

தாயின் மனநிலையே சேயின் மனநிலை


baby-270x170

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

  • கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
  • குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.
  • மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.
  • எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.
  • அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
  • கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
  • அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
  • சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.
  • மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.
  • கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
  • தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.
  • அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

Source:
http://www.thoothuonline.com

 

மூளையை மழுங்கடிக்கும் புகைப் பழக்கம் – ஆய்வில் தகவல்!


Smoking-habits-to-blunt-the-brain

லண்டன்:நினைவாற்றலையும், பகுத்து ஆராயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை “அழுகச் செய்கிறது” என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அழுத்தமும்கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

நமது பழக்க வழக்கங்கள் நமது உடல் ஆற்றலை எவ்வாறு பாதிக்கின்றனவோ அதேபோல நமது சிந்தனை ஆற்றல்களையும் பாதிக்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவிக்கிறார்.

ஏஜ் அண்ட் ஏஜிங் என்ற மருத்துவ ஜர்னலில் இவர்களது ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் மூளையின் ஆரோக்கியத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பதை கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரின் உடல் ஆரோக்கியம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் அவர்களுடைய மூளையின் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.

புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான பரிசோதனை, ஒரு நிமிடத்தில் எத்தனை பெயர்களை, எத்தனை விலங்குகளின் பெயர்களை சொல்ல முடிகிறது என்ற பரிசோதனை போன்றவற்றின் மூலம் இவர்களுடைய மூளையின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் கழித்து இதே நபர்களிடம் இதே உடல் மற்றும் மூளை பரிசோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டு முடிவுகள் ஒப்பிட்டுப்
பார்க்கப்பட்டன. மூளையின் ஆரோக்கியம் குன்றிப் போனவர்களிடையே மாரடைப்பு அபாயமும், மூளையில் ரத்தக் கசிவு அபாயமும் அதிகமாக உள்ளது என முடிவுகள் காட்டியிருக்கின்றன. தவிர மூளை ஆற்றல் பரிசோதனைகளில் ஒருவர் குறைந்த புள்ளிகள் வாங்குவதற்கும் புகைப் பழக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதையும் இந்தப் பரிசோதனைகள் காட்டியுள்ளன.

Source:
http://www.thoothuonline.com