இணைய நட்பு..!


இணைய நட்பு
என் உள்ளம் கவர்ந்துசென்ற
உருவமில்லா ஸ்னேகினே!
எங்கே நீ போய்விட்டாய்
ஏன் என்னை அழவிட்டாய்?

திங்கள் தொடங்கி இங்கு
தினம் ஏழும்
காத்திருந்தேன்
எங்கேயோ இருந்துகொண்டு
என்னைச்
சிறைப்பிடித்தாய்…

காலை எழுந்தவுடன்
காப்பியில்லை டீயில்லை
கணினியே கதியென்று
காத்திருக்க
வைத்துவிட்டாய்…

இ மெயிலில்
எழுப்பிவிட்டாய்
வாய்ஸ் மெயிலில்
சிரிக்கவைத்தாய்
வாழ்த்துக்கள் அனுப்பி
என்னை
வானத்தில் பறக்கவைத்தாய்
முகத்தை மட்டும் ஏன்
மறைத்தென்னை சோதித்தாய்?

Advertisements