வாழும் போது பிறரை மகிழ்வி..!


ஒரு வைத்திய சாலையில் இரண்டு கட்டில்கள்
ஒரு கட்டில் ஜன்னல் ஓரமாகவும் மற்றைய கட்டில் சற்று தள்ளியும் இருந்தது …

ஜன்னல் ஓரம் இருந்தவர் கட்டிலில் இருந்து எழுந்து இருப்பார் மற்றவரால் தலையை நிமிர்த்தி எழும்பமாட்டார் ..படுத்த படுக்கைதான் ..!

ஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை இவர் கூற மற்றவர் கேட்டு ரசிப்பார் …
ஒருநாள் ஜன்னலுக்கு வெளியே நீச்சல் தடாகம் இருப்பதாகவும் அதில் குழந்தைகள் குதித்து விளையாடுவதையும் வர்ணித்துக்கொண்டு இருந்தார் அதைக்கேட்ட மற்றவருக்கு ஆனந்தம் ..

மறுநாள் ஜன்னலுக்கு வெளியே மலையும் அதன் பசுமையையும் விளக்கினார் ..இப்படி நாளுக்கு ஒன்றை விளக்கியவர் ..மற்றவர் ஆனந்தத்தில் மிதப்பார் ……!

ஒருநாள் ஜன்னலோரம் இருந்தவர் இறந்து விட்டார் ….!

கவலைதாங்கமுடியாத மற்றவர் ஜன்னல் ஓரம்
தன் கட்டிலை போடும் படி கேட்க தாதிகள் அவ்வாறே ஜன்னல் ஓரம் கட்டிலை போட்டார்கள் ..

இதுவரை தன் தலையை அசைக்க முடியாமல் இருந்த இவர் ரெம்ப கஸ்டப்பட்டு தலையை தூக்கி
ஜன்னல் ஓரமாம வெளியே பார்த்தார் ….அதிர்ச்சி அடைந்தார் …ஆம் ..வெளியே மலையும் இல்லை
நீச்சல் தடாகமும் இல்லை ..மற்றைய கட்டிடத்தின் பெரும் சுவர் மட்டுமே இருந்தது …

தாதிமாரை அழைத்து இறந்தவர் இப்படியேல்லாம் சொன்னார் இங்கே அவர் சொன்ன ஒன்றுமே இல்லையே என்று கேட்டார் …?

தாதிகள் புன்னகை செய்துவிட்டு பெரியவரே அவருக்கு கண் தெரியாதே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றார்கள் ..

முதியோரின் கண்ணோரத்தில் கண்ணீர் வடிந்தது
தான் இருக்கும் காலம் வரை மற்றவர்களை மகிழ்வித்து வாழ்ந்த அந்த மாமனிதனை நினைத்தால் யாருக்குத்தான் கண்ணீர் வராது …?

எல்லோருக்கும் நெஞ்சு கணக்கும் …!

Source:
Via Fb

Advertisements

யார் யாரோ சொன்னார்கள்..!!


slippers-walks-on-a-log

தனது செருப்பு அறுந்து விட்டதால், ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து தைக்க சொன்னார் ஒரு படித்த அறிவாளி…

 

தொழிலாளியோ ஐயா, தற்போது எனக்கு வேறொரு வேலை இருப்பதால் கொடுத்து விட்டு போங்கள் பிறகு தைத்து தருகிறேன் என்றார்.

ஆனால், இவரோ எனக்கு இப்போது வேண்டும் என்றார்…

அவசரமாய் இருந்தால் பிறிதொரு செருப்பு தருகிறேன் அதை காலில் மாட்டி கொண்டு போய் விட்டு நாளை வரும் போது தாருங்கள்,, நான் அதற்குள் உங்கள் செருப்பை தைத்து வைக்கிறேன் நாளை பெற்று கொள்ளுங்கள் என்றார்.

ஆனால் அவரோ யாருடைய செருப்பையோ தந்து என் காலில் சுமக்க சொல்கிறாயே இது என்ன நியாயம் என்று எனக்கு ஒன்னும் புரியலையே.. அந்த செருப்பெல்லாம் வேண்டாம்.. என் சொந்த செருப்பை தைத்து கொடு என்றார்.. எப்போதுமே எனக்கு சொந்தமானதை மட்டுமே பயன் படுத்துவேன் என்றார்.

அதை கேட்ட அந்த தொழிலாளி சிரித்து கொண்டே அந்த அறிவாளியிடம் சொன்னார் ஐயா., பெர்னாட்ஷா சொன்னார்.. அரிஸ்டாட்டில் சொன்னார்.. இன்னும் யார் யாரோ சொன்னார்கள் என்று சொல்லி அதையெல்லாம் தலையில் சுமக்குகின்ற நீங்கள் ஒரு சாதாரண செருப்பை காலில் சுமக்க மறுக்குகிறீர்களே இது என்ன நியாம் என்று எனக்கும் ஒன்னும் புரியலையே என்றான்.

அவனின் புத்தி கூர்மை கண்டு வியந்து போனார், சற்று ஒரு கணம் நின்று..!

Source:
Via Fb

மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்..


Fishing

நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்….

சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா ? மேனேஜர் கேட்க,

நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன் என்றார் நம்மாளு.

அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்,

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய் ?

ஒருவரிடம் மட்டும்…

என்ன ஒருத்தர் மட்டுமா ?…
உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 லிருந்து 30 நபர்களிடம் சேல்ஸ் செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்.

சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய் ?

$10,12,347.64

ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா ? என்னென்ன விற்றாய் ?

முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.

பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள் ?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா என்று தெரியவில்லையே என்றார்.
நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4×4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன்”. இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்

என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய் ? மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் – ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்.

Source:
Via Mail

தெரியாத கேள்வி..? புரியாத பதில்..!


உங்களுக்கு தெரியாத கேள்வி யாராவது கேட்டா… நீங்க என்ன பண்ணுவீங்க..

“தெரியாதுன்னு” சொல்வீங்க..! அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம அதை எப்படி சமாளிக்கறது..!!

” If You can’t Convince them..
Then.. Try to Confuse Them..! “

உதாரணம் :

Question No.1 :

அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..?

அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா வால், குட்டையா இருந்ததே அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும் கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு சொன்னா..
நாமளும் நமக்கு பிடிச்ச எதோ பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல கண்டுபிடிச்சவர் யாரு..?

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி சொன்னவரு கிரேக்க மேதை “ஆல்பர்டோ பெர்ணாண்டஸ்” .
Unfortunately அவரு பூமி Clock Wise-ல சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

Question No 3 :

உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..?

” அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! ”
( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..?

” நேத்திக்கா..? இன்னைக்கா..? இப்பவா..? ”

இப்படிதான் கேக்கற கேள்விக்கு.. டக் டக்னு பதில் சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு தெரியாத கேள்வியை கேக்கலாம்.. நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத பதிலை சொல்ல கூடாதா..?!

Source:
Via Fb

எதிர்பார்க்காத பதில்கள்..!


Find X

கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்…

கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்…..

கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?

கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.

கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.

Source:
Via Fb

 

கொஞ்சம் மொக்கை.. கொஞ்சம் சக்கை..


நாடறிந்த ஒரு IT கம்பெனியில் Project Leader ஆகிய எனக்கு நாலு கழுதை வயதாகிவிட்டதால் திருமண ஏற்பாடு நடந்தது.

நாளை பெண்பார்க்கும் படலம்..

நல்ல குடும்பம், அழகான, அறிவான வரன் …என்னை தான் சொல்கிறேன்!!!!. யாருக்கு தான் என்னை பிடிக்காது.

பெண்ணின் தகப்பனார் வங்கியில் மேலாளராக இருக்கிறார். பார்க்கவிருக்கும்
பெண்ணின் போட்டோ கூட தரவில்லை. கேட்டதற்கு,
“நாங்க Orthodox family” என பதில் வந்தது.
“Orthodox Family” ல இருக்கவங்கள போட்டோ எடுத்தா பிரிண்ட்
விழாதான்னு நீங்க அதஇத கேட்டு என்னோட கல்யாணத்த நிறுத்திடாதீங்க ப்ளீஸ்.

இது தான் முதல் முறை. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அம்மா அப்பா
எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணை பார்க்க வேண்டும். அப்பொழுது மொத்த
குடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும் .

நாளை என்ன நடக்கும்… ஏன்டா பொண்ணைத்தான பாக்குற? ஏதோ Zoo ல
காண்டாமிருகத்த பாக்குற மாதிரி திகிலோட பாக்குறியே…கொஞ்சம் Romance ஆ
பாருடா என தாய்மாமா சொல்வாரோ?

பல சிந்தனைகள், பயங்கள், நெருடல்கள். இதற்கு ஒருவழி இருக்கிறது.
என்னுடைய நெருங்கிய நண்பன் jesus உடன் இருந்தால் கொஞ்சம் தெம்பாக
இருக்கும். jesus என்னுடைய பால்ய சிநேகிதன். மிக நல்லவன், வெகுளி.

எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். நாளை இவனும் இருந்தால், ஏதாவது பேசிக்கொண்டே
இருப்பான். எல்லோர் கவனமும் இவன் மீதே இருக்கும். நான் நிம்மதியாக பெண்ணை பார்க்கலாம் பேசலாம். jesus
விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன். நானே சொல்லனும்னு நெனச்சேன். கண்டிப்பா வரசொல்லு என்றார்.

மறுநாள் காலை…9:05 மணி. இராகுகாலம் முடிந்து புறப்பட்டோம்.
வழியெல்லாம் பெண்ணைப்பட்றியே சிந்தனை. அழகாக இருப்பாளா, எந்த சினிமா
நடிகை மாதிரி இருப்பாள்? கண்கள் எப்படி இருக்கும் ? புதிய அனுபவமாக
இருந்தாலும் நன்றாகவே இருந்தது!!.

பெண் வீட்டை அடைந்துவிட்டோம்.

வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது.. அது எங்களை
பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது. காலிங் பெல்லை
அழுத்தினார் அப்பா..

உள்ளே இருந்து ஒரு ஐந்து ஆறு தலைகள் திபுதிபுவென வெளியே வந்தார்கள்.
வாங்க வாங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா? வாங்க உள்ள வாங்க
என்றார்கள். உள்ளே நுழைந்தோம். ஹாலில் ஒரு போட்டோவை Frame செய்து மாட்டி
வைத்து இருந்தார்கள்.

அதில் ஒரு பெண்ணும், வெளியில் கட்டி போட்டு இருக்கும்
நாயும் இருந்தார்கள். அப்பா சொன்ன அடையாளம்
எல்லாம் வச்சி பார்த்தா, இவ தான் நான் பாக்க போற பொண்ணா இருக்கணும்.
அடடா என்ன அழகு.. நான் என் மனதை பறிகொடுத்தேன். உடனே என் மனதில் டூயட்.
“ஏதோ சொல்ல நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்”.
பாடி முடிக்கவில்லை… அதற்குள் jesus வாயெடுத்தான்.

அந்த போட்டோ ல இருக்க ரெண்டு நாயும் அழகா இருக்குல்ல? என்றான். டேய்
அதுல ஒன்னு எனக்கு பார்த்து இருக்க பொண்ணுடா.
சாரி சாரி ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி இருந்ததா நான் Confuse ஆயிட்டேன்.
என்னடா பதில் இது. டேய் வேற யார்கிட்டயாவது இப்படி சொல்லிடாத.

இந்த நேரத்தில், ஒரு ஆன்ட்டி என்னருகில் வந்தார். Hai, How is Your job?
என்றார். நல்லா இருக்கு. ஆமா நீங்க யாரு? என்றேன்..

நான் பொண்ணோட சித்தி, US ல இருக்கேன். நடராஜ் நாளைக்கி வருவார். நடராஜ்
உங்க பையனா? No No, He is my Husband . கூட காமராஜ் ம் வருவார்.
உங்களுக்கு மொத்தம் எத்தன Husband என கேட்டான் jesus !!!!. you rubbish,
காமராஜ் என்னோட Son.

சாரி ஆன்ட்டி, பேர் rhyming ஆ இருந்ததால கேட்டேன்.
ஆன்ட்டி என்னிடம், Is there any Onsite opportunity?
நமக்கு எங்க அதெல்லாம்…. நான் Offshore ல இருக்க figure அ தான் இன்னும் site அடிச்சிகிட்டு இருக்கேன் என நினைத்துக்கொண்டு….
No Onsite, Only Offshore Site Opportunity என இல்லாத புது வார்த்தையை சொன்னேன்.
Oh That is also very good na!!?!!?!!? என்றார்.
நடராஜ் Con-Call ல் பேசியதை வைத்து இந்த ஆன்ட்டி english ல் படம் போடுவது அப்பட்டமாக தெரிந்தது.

நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண கூப்பிடுங்க என்றார் என் அப்பா. பெண் தயாராகிவிட்டாள். இதோ கூப்புடுறேன் என்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணை அழைத்தார். பெண் ரூம் ல் இருந்து வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு
இருப்பது அப்பாவின் முகபாவனைகளில் தெரிந்தது. வாம்மா, ரொம்ப சாது, ஒன்னும் பண்ணாது என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் யாரை சொல்கிறார். அட வாம்மா, கடிக்காதுனு சொல்றேன் ல?. என்னை தான் சொல்லி இருக்கிறார். நாய் வளர்ப்பவர் என்று தெளிவாக காட்டினார் அந்த மனுஷன்.

ஒரு வழியாக பெண் வெளியில் வந்தாள். போட்டோவில் பார்த்ததைவிட அநியாயத்திற்கு ஒல்லியாக இருந்தாள்.
அடப்பாவிங்களா போட்டோவ Zoom-In பண்ணி பிரிண்ட் போட்டீங்களா? பொண்ணு இருக்குற எடமே தெரியாதுன்னு சொல்வாங்களே அது இது தானா என்றான் jesus பெண்ணின் தகப்பனாரைப்பார்த்து.
டேய் நீ வேற வேல் பாய்ச்சாதடா என்றேன்.

ஒல்லியாக இருந்தாலும் லட்சணமாக இருந்தாள். எனக்கு பிடித்துதானிருந்தது.
பெண்ணை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்கள். பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பித்தார். இந்த சம்பந்தம் எங்களுக்கு ரொம்ப திருப்தி, ஆனா இதுல ஒரு
விஷயத்த நான் சொல்லணும். பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம். அத கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றார்.

உடனே jesus , ஆயில்ய நட்சத்திரத்துல என்ன சார் பிரச்னை? அதுக்கு இல்லை,
பெண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்னா, மாப்பிள்ளைக்கு அம்மா இருக்க கூடாது என்றார் . அய்யய்யோ என தோன்றியது எனக்கு.

ஆனால் jesus அசராமல் சொன்னான்.

அதுக்கென்ன Sir, இன்னைக்கி சாயங்காலமே மாப்பிள்ளையோட அம்மா கதைய
முடிச்சிவிட்டுடறோம். நாளைக்கே உங்களுக்கு சேதி அனுப்பிடறோம். அடுத்த
முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம். என்னம்மா நான் சொல்றது என என்னுடைய அம்மாவையே கேட்டான்.
எங்க அம்மா சாமி வந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார்.

Sir, அதுல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனசு ஒத்து போச்சினா
கல்யாணத்த முடிச்சிடலாம் என்றார் என்னுடைய அப்பா. ரொம்ப சந்தோஷம், அப்போ
பையனோட கடைசீ ஆறு மாச Salary Slip அப்புறம் ஆறு மாச Bank Statement
குடுத்துவிடுங்க என்றார் பெண்ணின் பாட்டி!.

உடனே jesus , பாட்டி நாங்க பொண்ணு பாக்க வந்தோம். Housing Loan வாங்க வந்தோம்னு நெனச்சிட்டீங்க போல
என்றான்.

பெண்ணினுடைய அப்பா இடைமறித்தார். இல்லை இல்லை, அவுங்க சரியா தான்
கேக்குறாங்க அவுங்க கேட்ட documents அப்புறம் உங்க கம்பெனியோட அஞ்சி வருஷ
Balance Sheet, பேங்க் statement, auditor யாரு, உங்க கம்பெனி முதலாளி
யாரு, இப்போ எங்க இருக்கார். எல்லா detail ம் குடுத்து அனுப்புங்க என்றார்.

அதற்கு jesus , நாட்டு நடப்பு முழுக்க தெரிஞ்சி வச்சி இருக்கீங்க.
குடுக்குறது பத்தி இல்லை சார், இவனோட கம்பெனி முதலாளி பத்தி எல்லா detail ம் விசாரிச்சிட்டு, இவனைவிட அவரு better ஆ இருக்காருன்னு நீங்க அவருக்கு பொண்ண குடுத்துட கூடாதேனு பாக்குறோம் என்றான்.

பொண்ண குடுக்குறதுன்னா சும்மாவா என்றார் பெண்ணின் தகப்பனார். அட நீங்க வேற
சார், எங்க அப்பா கூட என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு
முன்னாடி, லூஸ் மாதிரி நீங்க கேட்ட கேள்வி எல்லாம் கேட்டு தான் கட்டி
குடுத்தாரு. ஆனா பாருங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான்
தெரிஞ்சது…மாப்பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆன சேதி. அதனால எது
தேவையோ அத கேளுங்க சார்.

டேய் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாடா என்றான் என்னைப்பார்த்து.

டேய் நீ கொஞ்சம் சும்மா இருக்கியா என்றேன்.

அப்போ நாங்க புறப்படறோம் என்றார் என்னுடைய அப்பா. ரொம்ப
சந்தோஷம்.. ஒரு வாரத்துல சொல்லி அனுப்பறோம். இது பெண்ணின் தகப்பனார்.

ஏதாவது குழந்தை இருந்தா குடுங்க சார், பேர் வச்சிட்டு கிளம்பறேன்
என்றான் jesus . குழந்தை எதுவும் இல்லை.. அடுத்த வாரம் தான் எங்க நாய்,
குட்டி போட போகுது. போட்ட உடனே சொல்லி அனுப்பறோம் என்றார் அந்த US
ஆன்ட்டி. அப்படியா, என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா? . இது jesus.
இல்லை. இது ஆன்ட்டி.
pregnant ஆன ஆறு மாசத்துல!? என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணா தெரிஞ்சிடும் என்றான்.

எனக்கு ஐயோ என கத்த வேண்டும் போல இருந்தது. டேய் jesus கிளம்புடா
என்றேன்.. வீடு திரும்பும்போது அம்மா, அப்பாவை பார்த்து கேட்டார், ஏங்க,
வழக்கமா பையன் வீட்லதான தகவல் சொல்லி அனுப்பரோம்னு சொல்வாங்க. இங்க என்ன
பொண்ணோட அப்பா சொல்றாரு?

எனக்கும் அது தான் யோசனையா இருக்கு. பார்க்கலாம் விதின்னு ஒன்னு
இருக்குல்ல என்றார் அப்பா. ஒரு வாரம் ஆகியும் தகவல் வரவில்லை. நாங்களே
தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில்
விருப்பம் இல்லையாம்.

அவர்கள் சொன்ன காரணம் : “பையனுக்கு சேர்க்கை சரி இல்லை!”. அடப்பாவி
jesus , இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா!.. விரக்தியோடு
அடுத்த வரனுக்காக காத்திருக்கிறேன்!!

பி.கு. :
உங்களுக்கு தெரிஞ்ச நல்ல குடும்பத்துல ஏதாவது பொண்ணு இருந்தா எனக்கு
சொல்லுங்க. கண்டிப்பா jesusய கூட்டிகிட்டு வரமாட்டேன். இது சத்தியம்!!

Source:
Via Mail

 

By an Posted in Fun

டூத் பேஸ்ட் பலன்கள்


டூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்..

நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் நம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று பட்டியிலிடுகின்றனர் ஒரு சிலர்.. படித்துப் பாருங்களேன்..

என்னமாதிரியான ஆராய்ச்சி? அடேங்கப்பா!! உலகத்துல வேற எந்த நாட்டுக்காரனாச்சும் இது போல செய்ய முடியுமா என்ன?

டூத் பேஸ்ட் பலன்கள்:

1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

4.பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

5. பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

6. துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

7. குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.

8. வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

9. சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

10. குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

11. வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

12. நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.

Source:
Via Mail

குண்டு பல்ப் vs ஃபோபுஸ் (Phoebus Cartel)


கலிஃபோர்னியாவில் லிவ்மோர் என்னுமிடத்தில் (Livemore, California) 2011ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி ஒரு பிறந்த தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. விசேஷமாக அமைந்த 110வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டம் அது. அந்தப் பிறந்த தினத்துக்கு உரியவர் யார் எனக் கேட்டால், மிகவும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அத்துடன் வாயடைத்தும் போவீர்கள். பிறந்த தினம் வேறு யாருக்கும் அல்ல, ஒரு சாதாரண மின்விளக்குக்குத்தான். நாம் ‘குண்டு பல்ப்’ என்று சொல்லும் ஒரு மின்விளக்கு அது. ஒரு சாதாரண குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், அதற்கு இந்தப் பிறந்த தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

“ஒரு குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் எரிந்ததா?” என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வீடுகளில் பாவனையில் இருக்கும் குண்டு பல்புகள் எல்லாம் சில மாதங்களிலேயே பழுதடைந்து போவதுதான், நாம் இதுவரை கண்டு வந்த உண்மை. அதிக பட்சம் ஒரு வருடம் பாவித்தாலே அது பெரிய விசயம். ஆனால் இந்த லிவ்மோர் மின்விளக்கு மட்டும் எப்படி நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்திருக்க முடியும்? அந்தக் குண்டு பல்ப் நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்தது என்பது மட்டுமில்லாமல், ஒருநாளும் அணைக்கப்படாமல் தொடர்ச்சியாக எரிந்திருக்கின்றது. அதுதான் யாரும் நினைக்கவே முடியாத ஆச்சரியம்.

அமெரிக்கா, ஓஹையோவில் (Ohio) அமைந்த, ‘ஷெல்பி எலெக்ட்ரிக் கம்பெனியால்’ (Shelby Electric Company) 1895 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மின்விளக்கு. 1991 இல் லிவ்மோரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் அது பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டே இருக்கிறது. இடையில் ஒருமுறை மட்டும், அந்த தீயணைப்பு நிலையம் திருத்தியமைக்கப்பட்ட போது, ஒரு வார காலம் அது எரியவில்லை. ஒரு மின்விளக்கு இவ்வளவு காலம் எரிவது சாத்தியமா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்துமே சுவாரஸ்யமானவை. உலகில் உள்ள மக்கள் அனைவரும் குறித்த சில நபர்களிடம் எப்படி எமாந்தோம் என்னும் தகவல்கலைச் சுமந்த சுவாரஷ்யம் அது.

கலிஃபோர்னியா குண்டு பல்ப் நூற்றுப் பத்து வருடங்கள் தாண்டியும் எரிந்து கொண்டிருப்பது தற்செயலாக இருக்குமோ என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே நமக்குக் கிடைக்கிறது. ‘ஷெல்பி’ கம்பெனியால் உருவாக்கப்பட்ட அந்த ஒரு மின்விளக்கு மட்டுமல்ல, அனைத்து மின்விளக்குகளுமே நூறு ஆண்டுகள் தாண்டியும், பழுதடையாமல் பாவிக்கக் கூடியதாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்னும் தகவல் நமக்குக் கிடைக்கின்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மின்விளக்குகள் நீண்ட காலம் பாவிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானத்தில் எட்ட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட இன்றைய நிலையில், ஏன் குண்டு பல்புகள் சில மாதங்களிலேயே பழுதடைகின்றன? அப்போதே நூறு ஆண்டுகள் பாவிக்கும்படி மின்விளக்குகளை உருவாக்கலாம் என்றால், இப்போது அதைவிட அதிக காலம் பாவிக்கும் படியாக அல்லவா உற்பத்தி செய்ய வேண்டும்? விஞ்ஞானம் எப்போதும் முன்னோக்கி நகருமேயல்லாமல், பின்னோக்கி நகர முடியாதே! இப்படியான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிர்ச்சி தரும் பதிலை ஒன்றைப் போட்டு உடைத்தார் ஹெல்முட் ஹோகெ (Helmut Hoege) என்பவர். ஹெல்முட் ஹோகே ஒரு ஜெர்மனிய வரலாற்று ஆய்வாளர். 1982 இல் இவர் பேர்லினில் கண்டெடுத்த கோப்புகள் மூலமாக, மறைந்திருந்த மிகப்பெரிய உண்மைகள் வெளியே வந்தன.

ஃபோபுஸ் (Phoebus Cartel)

1924 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் திகதி ஜெனீவாவில் இரகசியமாக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கோர்ட், டை அணிந்த கணவான்கள் அந்தக் கூட்டமைப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே பணக்காரப் பெருமுதலாளிகள். உலகில் உள்ள மின்விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்புக்கு ‘ஃபோபுஸ்’ (Phoebus Cartel) என்று பெயரிடப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இதுதான்.

“உலகில் மின்விளக்குகளைத் தயாரிக்கும் அனைத்துக் கம்பெனிகளும், மின்விளக்குகளின் பாவனைக் காலங்கள் பற்றி எந்தவிதக் கவனமுமில்லாமல் செயல்படுகின்றனர். அதிக காலம் பாவிக்கும் மின்விளக்குகளால் கம்பெனிகளுக்கு நஷ்டமே ஏற்படுகின்றன. இதுவரை நீண்ட காலம் எரியக் கூடிய மின்விளக்குகளைத் தயாரித்த அனைத்து கம்பெனிகளும், இனி மின்விளக்குகளின் பாவனைக் காலத்தை 1000 மணித்தியாளங்களாகக் குறைக்க வேண்டும்“.

இந்தத் தீர்மானம் அந்தக் கூட்டமைப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் மின்விளக்குத் தயாரிப்பின் ஜாம்பவான்களான, ஹாலந்தின் பிலிப்ஸ், ஜேர்மனியின் ஒஸ்ராம், பிரான்ஸின் லாம்ப் கம்பெனி என, அனைத்துக் கம்பெனிகளும் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது இதுவரை தரமாக இருந்த ஒரு பொருளை, மிகவும் மோசமான தரத்தில் உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டமைப்பு எடுத்த முடிவு. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள அனைத்துக் கம்பெனிகளும் இந்த கூட்டமைப்பின் ஒப்பந்தத்திற்கு பணிய வேண்டும். இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இந்த கூட்டமைப்பின் சட்டத்தை மீறும் கம்பெனிகள் அபராதம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை உருவாக்கப்பட்டதுதான். அதுபோல அபராதப் பணமும் பல கம்பெனிகளிடமிருந்து பெறவிடப்பட்டிருக்கின்றன.

1000 மணித்தியாளங்கள் என்பது மிகவும் குறைந்த பாவனைக் காலம். இரவுகளில் மட்டும் மின்விளக்குகளைப் பாவித்தாலும், ஒரு வருடத்திற்குள் பழுதடைந்து விடும் காலம். முதலாளிகளின் தனிப்பட்ட இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் இது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தம் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள், பழுதடைய வேண்டும் என்றே தயாரிக்கப்பட்ட மின் விளக்குகளையே இப்போதும் பாவித்து வருகின்றனர். வளர்ந்த விஞ்ஞானம் மக்களுக்கு எதிரான ஒரு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் கொடுமை இது. உலகப் பெருமுதலாளிகளிடம் நாம் ஏமாந்த கதை இது.

Source:
கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்.
-ராஜ் சிவா, வின் கட்டுரையுன் ஒரு பகுதி.
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=5815