தவறாகப்புரிந்துகொள்ளுதல்..


றவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே
ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை”

வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”

“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்”

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா”

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

தையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

வறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

னவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

Advertisements

கடத்தி (வயர் – wire) இன்றிய மின்சாரம் –


கடத்தி (Wire) இன்றி வீட்டு மின்சுற்றில் உள்ள குதைகளில் இருந்து மின்சாரத்தை பெற்று அதனை ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலையாக மாற்றி காற்றில் பறக்கவிட்டு மீண்டும் அந்த மின்காந்த அலைகளை உலோகக் கம்பிச் சுருள்களைக் கொண்ட உபகரணம் ஒன்றைப் பயன்படுத்தி மின்சாரமாக்கி, அந்த மின்சாரத்தைக் கொண்டு மின்சேமிப்பு மின்கலங்களை (Rechageable Battery) மின்னேற்றிப் பாவிக்கும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரத்தைப் பரிமாறிக் கொள்ளுதல் விற்றிசிற்றி (Witricity) என்ற புது நாமத்தோடு அழைக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் செல்லிடத்தொலைபேசிகள், மடிகணணிகள் போன்ற இலத்திரனியல் உபகரணங்களை கடத்திகள், சார்ஜர்கள் இன்றி மின்னேற்றிப் பாவிக்க வழி கிட்ட இருக்கிறது.

அதுமட்டுமன்றி தட்டைத் திரை தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்னேற்றிய மின்கலங்களில் இயக்கப்படும் வாகனங்களையும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இயக்க முடியும் என்றும் தெரிகிறது.


HOW WIRELESS POWER WORKS
:

1. First magnetic coil (Antenna A) housed in a box and can be set in wall or ceiling

2. Antenna A, powered by mains, resonates at a specific frequency
3. Electromagnetic waves transmitted through the air
4. Second magnetic coil (Antenna B) fitted in laptop/TV etc resonates at same frequency as first coil and absorbs energy
5. Energy charges the device

காந்த அலைகள் அல்லது மின்காந்த அலைகள் மின்னைக் கடத்தக் கூடிய உலோகச் சுருள்களை (கடத்திகள்) கடந்து செல்லும் செய்து மின்னைப் பிறப்பிக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே எடிசன், ரெஸ்லா போன்ற விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட உண்மையாக இருக்கின்ற போதிலும் தற்போதைய தேவைகளோடு மேற்படி கண்டுபிடிப்பு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதன் மூலம் கடத்திகள் மற்றும் பாவித்து விட்டு எறியும் மின்கலங்களின் பாவனையை வெகுவாகக் குறைக்கலாம் எங்கின்றார்கள் இந்த உபகரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள்.

இதற்கிடையே இவ்வாறு மின்காந்த அலைகளை காற்றில் செலுத்துவதால் மனிதருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய மின்காந்த அலைகளை அவர்கள் இதில் பாவிப்பதைத் தவிர்க்க முனைவர் என்றும் கூறப்படுகிறது.

பூமியின் சுழற்சி வேகம் கூடியுள்ளது


சமீபத்தில் சிலி நாட்டில் பசுபிக் சமுத்திரத்தை அண்டி ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவுள்ள பூமி அதிர்வின் போது பூமியின் சுழற்சி அச்சு 8 சென்ரி மீற்றர்கள் தள்ளி நகர்ந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் பூமி தன்னைத் தானே சுற்றும் காலம் 1.26 மைக்குரோ செக்கன்களால் குறைய வாய்ப்பு உருவாகி இருக்கலாம் என்று கணிப்பீடுகள் கூறுகின்றன.

இதற்கிடையே 2004 இல் இந்தோனிசியாவில் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் (இது 9.1 ரிக்டர் அளவானது) போதும் பூமியின் சுழற்சிக்காலம் 6.8 மைக்குரோ செக்கன்களால் குறைவடைந்திருந்ததோடு பூமியின் சுழற்சி அச்சும் 7 சென்ரிமீற்றர்கள் தள்ளி நகர்ந்து கொண்டதாக கணிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பூமியை ஆக்கியுள்ள படைகளில் அதன் மேற் தகட்டை ஆக்கியுள்ள பெருமளவு பாறைத் திணிவுகள் பூகம்பத்தின் போது நகர்த்தப்பட்டு மீளொழுங்கு செய்யப்படும் போது ஏற்படும் பெளதீகக் காரணி மாற்றங்களால் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்வதாக இது தொடர்பாக ஆராய்ந்துள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிலியில் ஏற்பட்ட சமீபத்திய பூகம்பத்தின் போதும் அதற்கு முன்னர் கெயிட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் பல நூறு மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களையும் இழந்து தவிக்கின்றனர் என்பதையும் இங்கு வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது.

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.


கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.

சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!

தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!

அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாயில் வாழும் பாக்டீரியாக்கள்


நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?

ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர். வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.

இந்தியா ரூபாய்க்கான (சர்வதேசக்) குறியீடு – Font with Indian Rupee Symbol


How to use ?

1. Download the Rupee.ttf font in the Link

2. Install the font. (It is easy. Just copy the font and paste it in “Fonts” folder in control panel)

3. Start using it. 🙂

Click to view large


How to type the Rupee symbol ?

We mapped the grave ascent symbol – ` (the key just above “tab” button in your keyboard) with the new Rupee symbol. Just select “Rupee” font from the drop down list of your fonts in your application and press the key just above your tab button. It will display our new rupee symbol. Try it.


Limitations

The “Rupee.ttf” font is necessary to view the currency symbol. So as long as the new symbol is not encoded in to unicode font by default, we cant use the symbol universally.

Source : http://blog.foradian.com/font-with-indian-rupee-symbol-download-and-us

எய்ட்சுக்கு மருந்து விரைவில் வருகிறது.!!


https://abdulthink.files.wordpress.com/2010/07/hiv.jpg?w=300

வாஷிங்டன் : எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்ஐவி கிருமிகள் வளர்ச்சியை 90 சதவீதம் தடுக்கும் இரண்டு தடுப்பு மருந்துகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் 2008ம் ஆண்டு நிலவரப்படி 3.34 கோடி எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். உயிர்க் கொல்லி நோயான எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகின் பல நாடுகளிலும் தொடர்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், எய்ட்சை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய 2 மருந்துகளை கண்டுபிடித்துள்ளது.

இதுபற்றி நிறுவன தலைவர் அந்தோணி பாஸி கூறுகையில், ‘’கடந்த 20 ஆண்டுகளாக எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சிறிய அறிகுறிகூட கிடைக்கவில்லை. தடுப்பு மருந்துக்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயாளிகள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 2 மருந்துகள் நம்பிக்கை அளிக்கின்றன’’ என்றார். தாய்லாந்தில் கடந்த ஆண்டில் 16,000 பேருக்கு தரப்பட்ட மருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரித்தது.

இதனால், எய்ட்சுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எய்ட்ஸ் நோயாளியின் உடலில் 2 தடுப்பு மருந்துகளை இணைத்து செலுத்தினால், எச்ஐவி கிருமிகள் வளர்ச்சியை 90 சதவீதம் தடுக்க முடியும் என தெரிய வந்தது என்றும் பாஸி தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றங்கள் பற்றி வியன்னாவில் நடைபெற உள்ள 18வது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் விளக்கப்படும். இதனால், எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் கிடைக்கும். எனினும், முற்றிலும் எய்ட்சை தடுக்கக் கூடிய, குணப்படுத்தக் கூடிய மருந்து எப்போது சாத்தியமாகும் என தெரியவில்லை.

தண்ணீருக்குள் குறிப்பெடுக்க…


சிலர் எல்லா நேரங்களிலும் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் குறிப்பேடுதான் `வாட்டர் புருப் நோட்ஸ்’.

இந்த குறிப்பேடை குளியலறை முதல்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தண்ணீர் பட்டாலும் எழுத்துக்கள் அழியாது. தாளும் கிழியாது. இதற்கான விசேஷ தாள் மற்றும் பென்சில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலும் இந்த குறிப் பேடு ஆய்வாளர்களுக்கு உப யோகப்படும். எப்போதும் உங்கள் குறிப்புகள் அழியாமல் இருக்க விரும்பினால் நீங்களும் வாங்கிப் பயன்படுத்தலாம்.