ஐந்து பைசா செலவில்லாமல் நம் உடல்நலனை நாமே பரிசோதிக்க ஒரு சின்ன டெஸ்ட்


சில எளிமையான உடற்பயிற்சிகள் (அல்லது உடல் அசைவுகள்) மூலம் நீங்கள் என்றும் இளமையாக ஆரோக்கியமாக வாழலாம். அதற்கு முதலில் ஒரு சின்ன டெஸ்ட் மூலம் உங்கள் உடல் மற்றும் உங்கள் மூளை எந்த கண்டிசனில் இருக்கிறது என்று பார்த்துவிடலாம்.

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது? உங்கள் மூளை எப்படி இருக்கிறது? இவற்றைக் கண்டறிய பெரிய மருத்துமனைக்கெல்லாம் போகவேண்டாம். ஒரு சின்ன பரிசோதனை எந்த செலவுமில்லாமல் நாமே செய்து பார்த்துவிடலாம். ரெடிதானே?

 

மேலே உள்ள படத்தில் காட்டியது போல் இரண்டு கைகளையும் நேராக நீட்டிக்கொண்டு, ஒரு காலை உள்பக்கமாக சற்று மடித்துவைத்துக்கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒற்றைக் காலில் நின்று கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்த நிலையில் 10 விநாடிகள் தொடர்ந்து உங்களால் நிற்க முடிந்தாலே போதும். உங்கள் உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். திருப்திதானே?

உங்களால் 5 விநாடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லையென்றால் உடல் நிலையும் மனோநிலையும் சரியில்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் இனி மிகவும் கவனமாக உடல் நிலையையும் மனநிலையையும் பேணவேண்டும். கவனம்.

கீழே உள்ள போட்டோவில் உள்ளது போல் உங்களது குழந்தைகள் அல்லது எந்தக் குழந்தைகளுடனாவது காலை அல்லது கையைத் தூக்கி விளையாடுங்கள். அது மிகவும் நல்லது.

மேலும் கீழே காட்டப்பட்டுள்ள மூளையின் படத்தைப் பாருங்கள்.

சிவப்பு குறியிடப்பட்டுள்ள மூளையின் பகுதிகள்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும். இது ஒரு சி.டி. ஸ்கேன் படமாகும். இந்த குறிப்பிட்ட பகுதிகள் ஆரோக்கியமாக இல்லை என்றால்தான் மேலே சொன்ன சிறிய பயிற்சியினை (அதாவது ஒற்றைக் காலில் நிற்பது ) 5 விநாடிகளுக்கு மேல் செய்ய இயலாமல் போகும்.

அப்படிப்பட்டவர்கள் மற்றும் எல்லோருமே கீழ்க்கண்ட படங்களில் கண்டபடி எளிய உடற்பயிற்சிகளை தினமும் ஒரு அரைமணி நேரம் செய்துவந்தாலே போதும். பாதிப்புகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமடையலாம்.

Source:
http://duraidaniel.blogspot.in

Advertisements

கொஞ்சம் மொக்கை.. கொஞ்சம் சக்கை..


நாடறிந்த ஒரு IT கம்பெனியில் Project Leader ஆகிய எனக்கு நாலு கழுதை வயதாகிவிட்டதால் திருமண ஏற்பாடு நடந்தது.

நாளை பெண்பார்க்கும் படலம்..

நல்ல குடும்பம், அழகான, அறிவான வரன் …என்னை தான் சொல்கிறேன்!!!!. யாருக்கு தான் என்னை பிடிக்காது.

பெண்ணின் தகப்பனார் வங்கியில் மேலாளராக இருக்கிறார். பார்க்கவிருக்கும்
பெண்ணின் போட்டோ கூட தரவில்லை. கேட்டதற்கு,
“நாங்க Orthodox family” என பதில் வந்தது.
“Orthodox Family” ல இருக்கவங்கள போட்டோ எடுத்தா பிரிண்ட்
விழாதான்னு நீங்க அதஇத கேட்டு என்னோட கல்யாணத்த நிறுத்திடாதீங்க ப்ளீஸ்.

இது தான் முதல் முறை. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அம்மா அப்பா
எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணை பார்க்க வேண்டும். அப்பொழுது மொத்த
குடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும் .

நாளை என்ன நடக்கும்… ஏன்டா பொண்ணைத்தான பாக்குற? ஏதோ Zoo ல
காண்டாமிருகத்த பாக்குற மாதிரி திகிலோட பாக்குறியே…கொஞ்சம் Romance ஆ
பாருடா என தாய்மாமா சொல்வாரோ?

பல சிந்தனைகள், பயங்கள், நெருடல்கள். இதற்கு ஒருவழி இருக்கிறது.
என்னுடைய நெருங்கிய நண்பன் jesus உடன் இருந்தால் கொஞ்சம் தெம்பாக
இருக்கும். jesus என்னுடைய பால்ய சிநேகிதன். மிக நல்லவன், வெகுளி.

எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். நாளை இவனும் இருந்தால், ஏதாவது பேசிக்கொண்டே
இருப்பான். எல்லோர் கவனமும் இவன் மீதே இருக்கும். நான் நிம்மதியாக பெண்ணை பார்க்கலாம் பேசலாம். jesus
விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன். நானே சொல்லனும்னு நெனச்சேன். கண்டிப்பா வரசொல்லு என்றார்.

மறுநாள் காலை…9:05 மணி. இராகுகாலம் முடிந்து புறப்பட்டோம்.
வழியெல்லாம் பெண்ணைப்பட்றியே சிந்தனை. அழகாக இருப்பாளா, எந்த சினிமா
நடிகை மாதிரி இருப்பாள்? கண்கள் எப்படி இருக்கும் ? புதிய அனுபவமாக
இருந்தாலும் நன்றாகவே இருந்தது!!.

பெண் வீட்டை அடைந்துவிட்டோம்.

வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது.. அது எங்களை
பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது. காலிங் பெல்லை
அழுத்தினார் அப்பா..

உள்ளே இருந்து ஒரு ஐந்து ஆறு தலைகள் திபுதிபுவென வெளியே வந்தார்கள்.
வாங்க வாங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா? வாங்க உள்ள வாங்க
என்றார்கள். உள்ளே நுழைந்தோம். ஹாலில் ஒரு போட்டோவை Frame செய்து மாட்டி
வைத்து இருந்தார்கள்.

அதில் ஒரு பெண்ணும், வெளியில் கட்டி போட்டு இருக்கும்
நாயும் இருந்தார்கள். அப்பா சொன்ன அடையாளம்
எல்லாம் வச்சி பார்த்தா, இவ தான் நான் பாக்க போற பொண்ணா இருக்கணும்.
அடடா என்ன அழகு.. நான் என் மனதை பறிகொடுத்தேன். உடனே என் மனதில் டூயட்.
“ஏதோ சொல்ல நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்”.
பாடி முடிக்கவில்லை… அதற்குள் jesus வாயெடுத்தான்.

அந்த போட்டோ ல இருக்க ரெண்டு நாயும் அழகா இருக்குல்ல? என்றான். டேய்
அதுல ஒன்னு எனக்கு பார்த்து இருக்க பொண்ணுடா.
சாரி சாரி ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி இருந்ததா நான் Confuse ஆயிட்டேன்.
என்னடா பதில் இது. டேய் வேற யார்கிட்டயாவது இப்படி சொல்லிடாத.

இந்த நேரத்தில், ஒரு ஆன்ட்டி என்னருகில் வந்தார். Hai, How is Your job?
என்றார். நல்லா இருக்கு. ஆமா நீங்க யாரு? என்றேன்..

நான் பொண்ணோட சித்தி, US ல இருக்கேன். நடராஜ் நாளைக்கி வருவார். நடராஜ்
உங்க பையனா? No No, He is my Husband . கூட காமராஜ் ம் வருவார்.
உங்களுக்கு மொத்தம் எத்தன Husband என கேட்டான் jesus !!!!. you rubbish,
காமராஜ் என்னோட Son.

சாரி ஆன்ட்டி, பேர் rhyming ஆ இருந்ததால கேட்டேன்.
ஆன்ட்டி என்னிடம், Is there any Onsite opportunity?
நமக்கு எங்க அதெல்லாம்…. நான் Offshore ல இருக்க figure அ தான் இன்னும் site அடிச்சிகிட்டு இருக்கேன் என நினைத்துக்கொண்டு….
No Onsite, Only Offshore Site Opportunity என இல்லாத புது வார்த்தையை சொன்னேன்.
Oh That is also very good na!!?!!?!!? என்றார்.
நடராஜ் Con-Call ல் பேசியதை வைத்து இந்த ஆன்ட்டி english ல் படம் போடுவது அப்பட்டமாக தெரிந்தது.

நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண கூப்பிடுங்க என்றார் என் அப்பா. பெண் தயாராகிவிட்டாள். இதோ கூப்புடுறேன் என்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணை அழைத்தார். பெண் ரூம் ல் இருந்து வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு
இருப்பது அப்பாவின் முகபாவனைகளில் தெரிந்தது. வாம்மா, ரொம்ப சாது, ஒன்னும் பண்ணாது என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் யாரை சொல்கிறார். அட வாம்மா, கடிக்காதுனு சொல்றேன் ல?. என்னை தான் சொல்லி இருக்கிறார். நாய் வளர்ப்பவர் என்று தெளிவாக காட்டினார் அந்த மனுஷன்.

ஒரு வழியாக பெண் வெளியில் வந்தாள். போட்டோவில் பார்த்ததைவிட அநியாயத்திற்கு ஒல்லியாக இருந்தாள்.
அடப்பாவிங்களா போட்டோவ Zoom-In பண்ணி பிரிண்ட் போட்டீங்களா? பொண்ணு இருக்குற எடமே தெரியாதுன்னு சொல்வாங்களே அது இது தானா என்றான் jesus பெண்ணின் தகப்பனாரைப்பார்த்து.
டேய் நீ வேற வேல் பாய்ச்சாதடா என்றேன்.

ஒல்லியாக இருந்தாலும் லட்சணமாக இருந்தாள். எனக்கு பிடித்துதானிருந்தது.
பெண்ணை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்கள். பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பித்தார். இந்த சம்பந்தம் எங்களுக்கு ரொம்ப திருப்தி, ஆனா இதுல ஒரு
விஷயத்த நான் சொல்லணும். பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம். அத கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றார்.

உடனே jesus , ஆயில்ய நட்சத்திரத்துல என்ன சார் பிரச்னை? அதுக்கு இல்லை,
பெண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்னா, மாப்பிள்ளைக்கு அம்மா இருக்க கூடாது என்றார் . அய்யய்யோ என தோன்றியது எனக்கு.

ஆனால் jesus அசராமல் சொன்னான்.

அதுக்கென்ன Sir, இன்னைக்கி சாயங்காலமே மாப்பிள்ளையோட அம்மா கதைய
முடிச்சிவிட்டுடறோம். நாளைக்கே உங்களுக்கு சேதி அனுப்பிடறோம். அடுத்த
முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம். என்னம்மா நான் சொல்றது என என்னுடைய அம்மாவையே கேட்டான்.
எங்க அம்மா சாமி வந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார்.

Sir, அதுல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனசு ஒத்து போச்சினா
கல்யாணத்த முடிச்சிடலாம் என்றார் என்னுடைய அப்பா. ரொம்ப சந்தோஷம், அப்போ
பையனோட கடைசீ ஆறு மாச Salary Slip அப்புறம் ஆறு மாச Bank Statement
குடுத்துவிடுங்க என்றார் பெண்ணின் பாட்டி!.

உடனே jesus , பாட்டி நாங்க பொண்ணு பாக்க வந்தோம். Housing Loan வாங்க வந்தோம்னு நெனச்சிட்டீங்க போல
என்றான்.

பெண்ணினுடைய அப்பா இடைமறித்தார். இல்லை இல்லை, அவுங்க சரியா தான்
கேக்குறாங்க அவுங்க கேட்ட documents அப்புறம் உங்க கம்பெனியோட அஞ்சி வருஷ
Balance Sheet, பேங்க் statement, auditor யாரு, உங்க கம்பெனி முதலாளி
யாரு, இப்போ எங்க இருக்கார். எல்லா detail ம் குடுத்து அனுப்புங்க என்றார்.

அதற்கு jesus , நாட்டு நடப்பு முழுக்க தெரிஞ்சி வச்சி இருக்கீங்க.
குடுக்குறது பத்தி இல்லை சார், இவனோட கம்பெனி முதலாளி பத்தி எல்லா detail ம் விசாரிச்சிட்டு, இவனைவிட அவரு better ஆ இருக்காருன்னு நீங்க அவருக்கு பொண்ண குடுத்துட கூடாதேனு பாக்குறோம் என்றான்.

பொண்ண குடுக்குறதுன்னா சும்மாவா என்றார் பெண்ணின் தகப்பனார். அட நீங்க வேற
சார், எங்க அப்பா கூட என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு
முன்னாடி, லூஸ் மாதிரி நீங்க கேட்ட கேள்வி எல்லாம் கேட்டு தான் கட்டி
குடுத்தாரு. ஆனா பாருங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான்
தெரிஞ்சது…மாப்பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆன சேதி. அதனால எது
தேவையோ அத கேளுங்க சார்.

டேய் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாடா என்றான் என்னைப்பார்த்து.

டேய் நீ கொஞ்சம் சும்மா இருக்கியா என்றேன்.

அப்போ நாங்க புறப்படறோம் என்றார் என்னுடைய அப்பா. ரொம்ப
சந்தோஷம்.. ஒரு வாரத்துல சொல்லி அனுப்பறோம். இது பெண்ணின் தகப்பனார்.

ஏதாவது குழந்தை இருந்தா குடுங்க சார், பேர் வச்சிட்டு கிளம்பறேன்
என்றான் jesus . குழந்தை எதுவும் இல்லை.. அடுத்த வாரம் தான் எங்க நாய்,
குட்டி போட போகுது. போட்ட உடனே சொல்லி அனுப்பறோம் என்றார் அந்த US
ஆன்ட்டி. அப்படியா, என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா? . இது jesus.
இல்லை. இது ஆன்ட்டி.
pregnant ஆன ஆறு மாசத்துல!? என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணா தெரிஞ்சிடும் என்றான்.

எனக்கு ஐயோ என கத்த வேண்டும் போல இருந்தது. டேய் jesus கிளம்புடா
என்றேன்.. வீடு திரும்பும்போது அம்மா, அப்பாவை பார்த்து கேட்டார், ஏங்க,
வழக்கமா பையன் வீட்லதான தகவல் சொல்லி அனுப்பரோம்னு சொல்வாங்க. இங்க என்ன
பொண்ணோட அப்பா சொல்றாரு?

எனக்கும் அது தான் யோசனையா இருக்கு. பார்க்கலாம் விதின்னு ஒன்னு
இருக்குல்ல என்றார் அப்பா. ஒரு வாரம் ஆகியும் தகவல் வரவில்லை. நாங்களே
தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில்
விருப்பம் இல்லையாம்.

அவர்கள் சொன்ன காரணம் : “பையனுக்கு சேர்க்கை சரி இல்லை!”. அடப்பாவி
jesus , இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா!.. விரக்தியோடு
அடுத்த வரனுக்காக காத்திருக்கிறேன்!!

பி.கு. :
உங்களுக்கு தெரிஞ்ச நல்ல குடும்பத்துல ஏதாவது பொண்ணு இருந்தா எனக்கு
சொல்லுங்க. கண்டிப்பா jesusய கூட்டிகிட்டு வரமாட்டேன். இது சத்தியம்!!

Source:
Via Mail

 

By an Posted in Fun

ரிலேட்டிவிட்டி… !!


ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியைப் பற்றி முதன் முதலாகப் படித்தது, சுஜாதாவின் “ஏன் எதற்கு எப்படி” என்ற புத்தகத்தில்- பதினைந்து வருடங்களுக்கு முன்னால். மனிதர் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் ந”மக்கு”ப் புரியவேண்டுமே. புரிந்து கொண்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரும்பத் திரும்ப வாசித்தபோது புரிந்தும் புரியாமலும் ஒரு அவஸ்தை.

மணிக்கு 100 கி.மீ செல்லும் டிரெயினில் கொறிக்கும் ஐட்டங்களுடன் குடும்ப சகிதமாகச் செல்கிறீர்கள். திடீரென்று குழந்தை வழக்கம்போல “ம்ஹூம் சாக்லெட்தான் வேணும்” என்று வீட்டிலிருந்து கொண்டுவந்த பொரி உருண்டையைத் தூக்கி எறிகிறது. பொ.உ 1 கி.மீ வேகத்தில் சென்று பக்கத்தில் இருக்கும் வழுக்கைத் தலையைப் பதம் பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். குழந்தையை அதட்டுவதற்க்குமுன், பொ.உ பயணம் செய்த வேகம் என்ன? என்று கேட்டால் மணிக்கு 1 கி.மீ என்று சொல்வீர்கள். மெத்தச் சரி. இந்தக் களேபரத்தை டிரெயினுக்கு வெளியில் இருந்து பார்த்த சிறுவனுக்குப் பொ.உ பயணம் செய்த வேகம் என்ன? மணிக்கு 101 கி.மீ. (100+1). எது சரி? 100? 101?…ஏன்? எப்படி?எதற்கு?. இரண்டும் சரிதான். The answer is relativity. What they see is relative to where they are!!!

ரிலேட்டிவிட்டியின் அடிப்படை, ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் வஸ்து இந்த உலகத்தில் – இந்த உலகத்தில் என்ன – எந்த உலகத்திலுமே (universe) இல்லை என்ற கோட்பாட்டின் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது. உத்தேசமாக ஒரு விநாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் வேகத்தில் கடந்துபோகும் ஒளியின் வேகத்தை மனிதனால் மட்டுமல்ல எதனாலும் மீறவேஏஏஏஏஏ…. முடியாது. இரவு சாப்பாடுக்குப் பிறகு திண்ணையில் உட்கார்ந்து அண்ணாந்து பார்க்கும்போது தெரிகிறதே நட்சத்திரம், அதிலிருந்து வரும் ஒளி எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் தன் பிரயாணத்தை ஆரம்பித்து இன்று தான் உங்களை வந்து அடைந்திருக்கிறதென்றால் பிரபஞ்சத்தின் விசாலத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்காதீர்கள்!! அது முடியாது.

ஒளியின் வேகத்தை மீற முடிந்தால்?..அற்புதம் தான் போங்கள்!!!. தற்காலத்தில் புழக்கத்திலிருக்கும் பிரபஞ்சம் பற்றிய புரிந்து கொள்ளலையே மாற்றி எழுத வேண்டி வரும். ஒளியின் வேகத்திற்குப் பக்கத்தில் போனாலே காலம் சுருங்கும். அதாவது அந்த வேகத்தில் பயணிப்பவரின் காலம் (Time), பூமியில் இருப்பவரின் காலத்தை விட மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். கீழ்க்கண்டவாறு சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம்.

மீண்டும் ரெயில். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்யும் ஒரு ரெயில் – ஸ்பெக்ட்ரம் அண்ட் கோ ஊழல் இல்லாமல் ஒப்பந்தம் கொடுத்து உருவாக்கப்பட்டது – சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு ஒரு வருடம் காலவெளியில் சுற்றிவிட்டுத் திரும்ப சென்ட்ரலில் வந்து இறங்கினால், பூமியில் வசித்த நம் உற்றார் உறவினர் சுற்றத்தார் என்போர்களை அடக்கம் செய்த இடத்தில் முளைத்தப் புல்லைச் செத்திவிட்டு அடுத்த தலைமுறை அடக்கமும் கழிந்திருக்கும். அதே அழுக்குப் படிந்த சென்ட்ரலாக இருந்தாலும் கோணா மாணா என்று ஆடையணிந்த புதிய தலைமுறையைப் பார்க்கலாம். வேடிக்கை, இரண்டு கூட்டத்தாருக்கும் காலம் எந்த வித்தியாசமுமின்றி கடந்திருக்கும். அதாவது ரெயிலில் இருந்த நமக்கு சவரம் செய்ய ஐந்து நிமிடங்கள் தேவையானது என்றால், பூமியில் இருக்கும் மற்றவர்களுக்கும் அதே ஐந்து நிமிடம்தான். Time is relative to everyone everywhere and seems to pass at the same rate. !!!. இவ்வளவு ஆர்ப்பாட்டமும் ஒளியின் வேகத்தின் 90% சதவீதம் பயணம் செய்ய முடிந்தால்.

ஒளியின் வேகத்தை மிஞ்சி விட்டாலோ??? “இன்று புறப்பட்டு நேற்று வந்து சேர்ந்துவிடலாம்” என்பது சுஜாதாவின் உதாரணம். ஆம்..இன்னும் வேகம் அதிகரிக்கக் காலம் சுருங்கி, சுருங்கி கடந்த காலத்திற்குள் போய் முன்னோர்களை நலம் விசாரிக்கலாமாம். இதைதான் காலத்தில் பயணம் என்கிறார்கள். இதற்கான இயந்திரத்திற்குக் காலஇயந்திரம் என்று பெயர். நடக்கிற காரியமா? நடக்க வேண்டும் என்றால் ஒளியின் வேகத்தை மிஞ்ச வேண்டும். ஐன்ஸ்டீனின் இந்தத் தியரி 106 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது சென்ற மாதம் வரை.

ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் – ஐரோப்பிய அணு ஆரய்ச்சி நிறுவனம் (CERN) (நாம் மேய்ந்து கொண்டிருக்கும் www வை 1989 ல் டிம்பெர்னஸ் உருவாக்கியது இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் தான் என்பது உபரித்தகவல்!!!.) ஒளியை விட வேகமாகச் செல்லும் ஒரு அணுத்துகளை (Neutrinos) கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி சிறிது வேர்த்திருக்கிறது.

மூன்று வருட காலமாக சுமார் பதினைந்தாயிரம் நியுட்ரினோ ஒளிக்கற்றைகளை ஜெனீவாவிலிருந்து இத்தாலிக்கு அனுப்பி சோதனை செய்ததில் நியுட்ரினோக்கள் ஒளியைவிட 60 நானோ செக்கண்ட் வேகமாக வந்து சேர்ந்திருக்கிறது.

ஜுஜுபி கணக்குத்தான் என்றாலும் ஒரு கோட்பாட்டை அசைத்திருக்கிறது என்பதில் அறிவியல் உலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இன்னும் இது சரியான முடிவு என்று ஏற்றுக் கொள்ளப் படவில்லையென்றாலும் ஆராய்ச்சிகள் இந்தத் திசையில் முடுக்கி விடப்பட்டிருக்கிறது…..

காலம் தான் பதில் சொல்லவேண்டும்.!!!

ஏழு குகை மனிதர்களின் காலம் கடந்து போனது இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறது.

– அபூ பிலால்.

Source:
http://www.inneram.com

டூத் பேஸ்ட் பலன்கள்


டூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்..

நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் நம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று பட்டியிலிடுகின்றனர் ஒரு சிலர்.. படித்துப் பாருங்களேன்..

என்னமாதிரியான ஆராய்ச்சி? அடேங்கப்பா!! உலகத்துல வேற எந்த நாட்டுக்காரனாச்சும் இது போல செய்ய முடியுமா என்ன?

டூத் பேஸ்ட் பலன்கள்:

1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

4.பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

5. பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

6. துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

7. குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.

8. வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

9. சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

10. குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

11. வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

12. நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.

Source:
Via Mail

சொற்குற்றம்


யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்

நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்

ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?

சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.

-சுகுமாரன்

Source:
http://vaalnilam.blogspot.in