சோமாலியாவில் கடும் பஞ்சம்


பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்

Baidoa

ஒரு நாடே வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் இலட்சத்தை தாண்டி விட்டது.. ஆனாலும் இதை பற்றி எந்தவித செய்தியையும் பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது.. ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள் என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலக நாடுகளும் நினைக்கவில்லை போலும்..

ஈதியோப்பாவின், சோமாலியாவின் வறுமை என்பது ஏதோ நிலையான் ஆட்சி இன்மை மற்றும் ஆயுதங்களால் தான் என்று நாம் தினம் தினம் பேசுகின்றோம் ஆனால் நாம் அனைவரும் மறந்த மற்றும் பத்திரிக்கைகள் மறைத்த செய்தி என்னவென்றால் அங்குள்ள பசி பஞ்சத்திற்கும் ஆயுத கலாச்சாரத்ரிகும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தான் காரணம் என்ற உண்மையை..

காரணம், அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையிட..

அணு ஆயுத கழிவுகளை கொட்ட அவர்களின் கடற்பரப்பை பயன்படுத்த..

என அணைத்து அக்கிரமங்களும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளால், நிகழ்த்தப்பட்டு வருவது தான் வேதனை(காரணம்)…

– நல்வினை வழக்கறிஞர்

Source:
Via Fb

பனை மரம்


பனையை வெட்டினால்.. நதிகள் வறண்டு போகும்…!

palm_tree

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்…

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை… நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவேண்டும்.

Source:
Via Fb

பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ்


அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!

– ஆளூர் ஷாநவாஸ்

doctor abdullah

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.

 

சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

 

எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

 

பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

 

தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.

பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.

 

ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.

 

பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

 

மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.

 

இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

 

‘தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது’ எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.

 

‘பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.

 

இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தவரை பார்ப்பதற்காகச் சென்ற போது, சிறப்புப் பிரிவுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என மறுத்தது மருத்துவமனை நிர்வாகம். உடனே படுக்கையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து நீண்ட நேரம் எம்மோடு உரையாடினார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.

 

2001 ஆம் ஆண்டிலிருந்தே அவரை நான் நெருக்கமாக அறிவேன். அவரிடம் மணிக்கணக்கில் உரையாடிய மிகச் சிலரில் நான் ஒருவன். அவரை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நேர்காணல்கள் செய்துள்ளேன்.

 

ஒவ்வொருமுறையும் அவரை சந்திப்பதற்காக பச்சையப்பன் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள கேண்டீனில் அமர்ந்தே பேசுவோம். கடைசியாக அவரிடம் மருத்துவமனை கேண்டீனில் அமர்ந்துதான் பேசினேன்.

 

இனி எங்குமே அவருடன் பேச முடியாது!

 

Source:
Via Mail

யார் யாரோ சொன்னார்கள்..!!


slippers-walks-on-a-log

தனது செருப்பு அறுந்து விட்டதால், ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து தைக்க சொன்னார் ஒரு படித்த அறிவாளி…

 

தொழிலாளியோ ஐயா, தற்போது எனக்கு வேறொரு வேலை இருப்பதால் கொடுத்து விட்டு போங்கள் பிறகு தைத்து தருகிறேன் என்றார்.

ஆனால், இவரோ எனக்கு இப்போது வேண்டும் என்றார்…

அவசரமாய் இருந்தால் பிறிதொரு செருப்பு தருகிறேன் அதை காலில் மாட்டி கொண்டு போய் விட்டு நாளை வரும் போது தாருங்கள்,, நான் அதற்குள் உங்கள் செருப்பை தைத்து வைக்கிறேன் நாளை பெற்று கொள்ளுங்கள் என்றார்.

ஆனால் அவரோ யாருடைய செருப்பையோ தந்து என் காலில் சுமக்க சொல்கிறாயே இது என்ன நியாயம் என்று எனக்கு ஒன்னும் புரியலையே.. அந்த செருப்பெல்லாம் வேண்டாம்.. என் சொந்த செருப்பை தைத்து கொடு என்றார்.. எப்போதுமே எனக்கு சொந்தமானதை மட்டுமே பயன் படுத்துவேன் என்றார்.

அதை கேட்ட அந்த தொழிலாளி சிரித்து கொண்டே அந்த அறிவாளியிடம் சொன்னார் ஐயா., பெர்னாட்ஷா சொன்னார்.. அரிஸ்டாட்டில் சொன்னார்.. இன்னும் யார் யாரோ சொன்னார்கள் என்று சொல்லி அதையெல்லாம் தலையில் சுமக்குகின்ற நீங்கள் ஒரு சாதாரண செருப்பை காலில் சுமக்க மறுக்குகிறீர்களே இது என்ன நியாம் என்று எனக்கும் ஒன்னும் புரியலையே என்றான்.

அவனின் புத்தி கூர்மை கண்டு வியந்து போனார், சற்று ஒரு கணம் நின்று..!

Source:
Via Fb

நேதாஜி எனும் இந்திய சிங்கம்


Neathaji
நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!

Source:
Via Fb

Read More:
http://en.wikipedia.org/wiki/Subhas_Chandra_Bose

அய்யப்பன் பற்றிய புராணக் கதைதான் என்ன?


பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோசனையின்றி கேட்ட வரத்தைத் தருவதாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை எரிந்து விடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே வரம் அளித்தான்.

வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சோதனை செய்து பார்க்க முயன்றான். சிவன் தப்பித்து ஓட, பத்மாசூரன் விரட்டிக் கொண்டு போனான்.

இந்த நிலையில், தனது மைத்துனன் சிவனுக்கு மோசம் விளைந்ததே எனக் கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி, திருமால் மோகினி உருவெடுத்து எதிரே வந்தான்.

பத்மாசூரன் மதிமயங்கி மோகினியிடம் (திருமால்) நெருங்கினான். இப்படி வந்தால் இணங்கமாட்டேன். குளித்துச் சுத்தமாக வர வேண்டும் என்று மோகினி கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தன் கையால் அவன் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து சாம்பலாகிவிடுகிறான்.

பிறகு ஒளிந்திருந்த சிவனை, திருமால் அழைத்து நடந்ததைக் கூறினான்.
சிவனுக்குச் சபலம் ஏற்பட்டு காமவெறி உச்சத்தை அடைந்தது!
மீண்டும் திருமால் மோகினியானான்!
அவனோடு கூடும் முன்பே, இந்திரியம்
வழிந்தது. கையிலே பிடித்தான்.
கையிலேயே பிள்ளை பிறந்தது.
அதை கையப்பன் என்று சொல்லி பிறகு அய்யப்பன்
ஆகி மருவியது!

அரி (திருமால்), கரன் (சிவன்) இருவருக்கும்
பிள்ளை பிறந்ததால் அரிகரன் திருமாலுக்கும்,
சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்ற பொருள்
வந்ததாம்!

Source:
Via Fb (Ansar Basha)

Read More:
http://en.wikipedia.org/wiki/Ayyappan

கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. கஷ்மீரிகளின் வார்த்தைகளில்….


kashmir
திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்? அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.

ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?

ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.

நேரடி களத்தொகுப்பு – தமீமுன் அன்சாரி.

Source:
Via Fb