Careful what you say around the children – babies can ‘hear’ words at just 9 months old


Parents should be worried about what they say in front of children.Youngsters can recognize speech at nine months old, claim scientists. That is far earlier than previously believed.

Whether or not Dads need to worry if they inadvertently turn the air blue remains to be seen.
Professor Athena Vouloumanos, of New York University, said: ‘Parrot speech is unlike human speech, so the results show infants have the ability to detect different types of speech, even if they need visual cues to assist in this process.
‘Our results show that infant speech perception is resilient and flexible. This means that our recognition of speech is more refined at an earlier age than we’d thought.’

Research showed that kids were able to distinguish between human speech and an imitation – in this case a talking parrot – earlier than previously believed.

Scientists know adults’ speech perception is fine-tuned as they can detect speech among a range of ambiguous sounds, but the capability of kids to do the same was not clear.

Tests were conducted on children aged nine months old, with responses to human and parrot speech and non-speech sounds measured to find out how early in life we develop the ability to recognize speech.

Human and parrot words included ‘truck’, ‘treat’, ‘dinner’ and ‘two’, while non-speech sounds were whistles and a clearing of the throat for the person and squawks and chirps for Alex, the African Gray parrot.
As tots cannot verbally communicate their responses, the researchers used a common method to measure the process – seeing if they gaze longer at what they find interesting or unusual.

Looking longer at a visual paired with sound could be interpreted as a reflection of recognition, so the study paired sounds with visuals, including a checkerboard-like image, adult female faces and a cup.

Results showed children listened longer to human speech, compared with human non-speech sounds, regardless of the visual props.
When paired with human face visuals or human artefacts like cups, the infants listened to parrot speech longer than they did non-speech, as their preference for parrot speech was similar to their preference for human speech sounds.

However, this did not occur in the presence of other visual props, so the Developmental Psychology study says children were able to distinguish animal speech from non-speech, but only in some contexts.

Source:
http://www.dailymail.co.uk

டார்க் எனர்ஜி (Dark Energy)


நாம் வாழும் பூமி, பூமியின் இருப்பைக் கொண்டிருக்கும் சூரியக் குடும்பம், சூரியக் குடும்பத்தை தன் வசம் வைத்திருக்கும் ‘மில்க்கி வே’ காலக்ஸி, ‘மில்க்கி வே’ காலக்ஸி போன்று பில்லியன் எண்ணிக்கையில் காலக்ஸிகள் என்று விரிந்திருக்கிறது அண்டம் (Universe). அதை அண்டம் என்று சொன்னால் அதன் தாக்கத்தை நம்மால் உணர முடியாது. அதனால், பேரண்டம் என்று சொல்வதே பொருந்தும். அண்டத்தில் ட்ரில்லியன் ட்ரில்லியன் எண்ணிக்கையில் நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கின்றன.

பூமியில் உள்ள சகல கடற்கரைகளிலும் இருக்கும் மணலின், சின்னஞ்சிறிய மணல் துகள்களை நாம் எண்ணினால் எவ்வளவு எண்ணிக்கை வருமோ, அதைவிட அதிகமான நட்சத்திரங்களும், கோள்களும் அண்டத்தில் இருக்கின்றன. இதை உங்களால் நம்பவே முடியாமல் போகலாம். காரணம், அந்த அளவுக்குக் கணக்கிடவே முடியாத மிகப் பெரிய எண்ணிக்கை இது.

அத்துடன் இதில் இன்னுமொரு வேடிக்கையும் உண்டு. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நட்சத்திரங்களும், கோள்களும் அண்டத்தில் இருந்தாலும், அவை அண்டத்தின் அளவில் வெறும் 4% மட்டும்தான் உள்ளன. இதில் மேலும் ஒரு ஆச்சரியமும் உண்டு. இந்த 4 வீதத்திலும் 0.4% மட்டுமே நட்சத்திரங்களும், கோள்களுமாக உள்ளன. எஞ்சிய 3.6 வீதமும் வாயுக்களாகவும், தூசிகளாகவுமாகவே (Intergalactic Gas) இருக்கின்றது.

நான்கு வீதங்கள் போக, அண்டத்தின் எஞ்சிய 96 வீதமும் வெறுமையாக இருக்கின்றன என்றுதான் முன்னர் நினைத்திருந்தார்கள். ஆனால் அவை வெறுமையில்லை. கரும் சக்தி (Dark Energy), கரும் பொருள் (Dark Matter) என்னும் இரண்டினால் நிரம்பியிருக்கிறது. கரும் சக்தி, கரும் பொருள் ஆகியவை பற்றி விளக்கமாகப் பார்க்கப் போனால் அதற்குள்ளேயே நாம் தொலைந்து விடுவோம். எனவே கரும் சக்தி பற்றி மட்டும் ஒரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு மேலே தொடர்கிறேன்.

டார்க் எனர்ஜி (Dark Energy) என்று சொல்லப்படும் கருமையான மிகை வலுச் சக்தியொன்று, நமது அண்டம் பூராவும் பரந்திருக்கிறது. அண்டத்தின் 73% இந்தச் சக்தியினால்தான் நிரப்பப்பட்டு இருக்கின்றது. பூமியில் வாழும் நாம் எத்தனையோ விதங்களில் சக்திகளைக் கண்டிருக்கிறோம். அவற்றுள் அணுசக்தியையே மிகவும் வலுவானது என்றும் உணர்ந்திருக்கின்றோம். உலகில் உள்ள நாடுகள் எல்லாமே, அணுசக்தியின் மூலமாக, மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. அணுசக்தியின் பின் விளைவுகள் மிகப் பயங்கரமானவை என்று தெரிந்தாலும், வேறு வழியின்றிப் பல நாடுகள் அதைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற்றுவருகின்றன. ஆனால், அண்டத்தில் உள்ள டார்க் எனர்ஜியுடன் அணுசக்தியை ஒப்பிட்டால், அணுசக்தி ஒன்றுமே இல்லை என்னும் ரகம்தான்.

டார்க் எனர்ஜியை ஒரு தேனீர் கலக்கும் கரண்டி (Teaspoon) அளவு சேகரித்து எடுத்தோமானால், அதை வைத்துக் கொண்டு, பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், நூறு வருடங்களுக்கு இருபத்திநான்கு மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கலாம். என்ன உங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை அல்லவா? உண்மைதான், அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்தக் கரும் சக்தி. அதை எப்படிச் சேமிப்பது என்பதில்தான் பல விஞ்ஞானிகள் மூளையைப் போட்டுப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ட்ரில்லியன் ட்ரில்லியன் நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கும் அண்டத்தில் 73% நிறைந்திருக்கும் இந்தக் கரும் சக்தியை, எப்போது மனிதன் தன் கைவசப் படுத்துகிறானோ, அப்போது அண்டத்தின் வலுமிக்க முக்கிய அங்கமாக மாறிவிடுவான். இன்று அது சாத்தியமாகாமல் போனாலும், இன்னும் நூறு ஆண்டுகளில் அல்லது ஆயிரம் ஆண்டுகளில் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளிலாவது இது மனிதனுக்குச் சாத்தியப்படலாம். அப்போது மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்றாகிவிடும்.


ராஜ்சிவா
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன ? என்ற கட்டுரையுன் ஒரு பகுதி.
http://www.uyirmmai.com/Uyirosai