உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?


Child

குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது.

கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது (சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்).

புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.

பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

4, 5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்

தினமும் அரைமணி நேரம் தந்தை, நண்பனை போல உரையாடவேண்டும்.

Source:
Via Fb

Advertisements

சர்வாதிகாரி ஹிட்லர்


Hitler-Addressing-Berlin-1937

நாளைய வரலாறு என்னை பற்றி மிகவும் தவறாக இருக்கும்…

நான் சர்வாதிகாரி என்று சொல்வார்கள்…

நான் அதிகமான மக்களை கொன்று குவித்தேன் என்று சொல்வார்கள்….

ஒருநாள் வரும் அப்பொழுது இந்த யூதர்கள் அளிக்க பட வேண்டியவர்கள் தான் என்று நிங்களே சொல்விர்கள் –

உலகிலுள்ள 90 சதவீதம் யூதர்களை நான் அழித்துவிட்டேன், மீதி 10 சதம் பேரை விட்டுச் செல்கிறேன், நான் ஏன் யூதர்களை அழித்தேன் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விட்டு செல்கிறேன்…

– ஹிட்லர்…

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: உலகிலேயே மிக மோசமான கணவர்..!


Albert Eienstin Life

உலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய “Einstein: His Life and Universe” என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது.

இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம்.

ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்தவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம் அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை பட்டியல்.

அதையும் விட தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார்.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு பல பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ~

Source:
Via Facebook

 

லக்ஷ்மி ஓரான்: “அடித்து உதைத்து” இது வெறும் வார்த்தை அல்ல “வலி” ..!!


Lakshmi Oran

வீர பெண்மணி லக்ஷ்மி ஓரான்..!

“அடித்து உதைத்து”
இது வெறும் வார்த்தை அல்ல
“வலி” ..!!

“சாதி இந்துக்களால்
அம்மணமாக்கி
அவமானம் படுத்தப்பட்டு
வீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு
மேல் சாதிக்காரர்களால்
ஒருவர் விடாமல் உதைக்கப்பட்டு
சாதி வெறிக்கு இரையான
லக்ஷ்மி ஓரான் சொன்னது இது தான் …

“நான் மிகுந்த அவமானத்தில் இருக்கிறேன்
இந்த அவமானத்தை என்னால்
என் வாழ்கையின்
எந்த காலகட்டத்திலும்
மறக்கவே முடியாது …

ஆதிவாசிகள் உரிமைகளை
கேட்பது தவறா .. ??
மனிதர்களாக மதிக்கப்படவேண்டும்
என்று விரும்பாது தவறா .. ??
வீதியில் நாய்கள் நுழைந்தால் கூட
ஒன்றும் செய்யாத மேல் சாதி .
நாங்கள் நடந்ததும் எங்களை
கேவலமாக அடித்து விரட்டுவது ஏன் ??
நாங்கள் நாய்களைவிட
கேவலமானவர்களா ??”

“நான் தற்கொலை செய்துகொள்ள
யோசிக்காத இரவே இல்லை…
அனால்
என்னை நம்பித்தான் என் குடும்பம்
இருக்கிறது..
அந்த குடும்பம் எப்போதும் போல
வறுமையில் தான் இருக்கிறது …
அதை காபற்றத்தான் நான்
அவமானத்தை மறந்து
வருமானத்திற்க்காக
இன்று
செக்யுரிட்டி வேலை பார்கிறேன் ..!!”

“பார்பனனைவிட சில சாதி இந்துக்கள் கொடியர்வர்கள் என்று இந்தியா தொடர்ந்து நிருபித்துவருகிறது .. 

ஆசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக 
போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி அடித்து உதைத்து விரட்டி அடித்தனர் சில சாதி இந்துக்கள் ..!!”

“அடித்து உதைத்து”
இது வெறும் வார்த்தை அல்ல 
“வலி” ..!!

Source:
Via Facebook

பீட்டர் அல்போன்ஸ்: உரிமை மறுக்கப்பட்டவர்களின் போராட்டம் பயங்கரவாதமா ?


நெல்லையிலிருந்து சென்னைக்கு புகை வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தேன். வேத வியாக்கியானங்களில் விற்பன்னராகத் திகழ்ந்த அருமைநண்பர் ஒருவரும் என்னுடன் பயணம் செய்தார். தன்னை அறிவு ஜீவி என்று கூறிக்கொள்கின்ற அவர் தேவைக்கு அதிகமாகவே பேசக் கூடியவர்.

ட்ரைன் புறப்படும்நேரத்தில் ஒரு முஸ்லிம் சகோதரரும் பர்தா அணிந்த அவரது மனைவியும் நாங்கள்இருந்த பெட்டியில் வந்து ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகி விட்டது.அதிகமாக பேசக் கூடிய அந்த வேத விற்பன்னர் பேச்சை நிறுத்தி விட்டார்.அதோடு, அடிக்கடி தலையைத் தடவுவார்…அண்ணாந்து பார்ப்பார்…மன அமைதிஇல்லாததுபோல் தவித்தார்.” உடம்புக்கு சரியில்லையா?” என்று நான்கேட்டதற்கு ” அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று கூறிவிட்டார்.

அதிகாலையில் சென்னை வந்து சேர்ந்ததும் ” இரவெல்லாம் ஏன் தூங்கவில்லை?” என்று அவரிடம் கேட்டேன்.

“எப்படிய்யா தூக்கம் வரும்? இந்த பாயும் அவர்பொண்டாட்டியும் நம்ம கூட இருக்கும்போது தூக்கம் வருமா?” என்று திருப்பிக்கேட்டார்.

“ஏன் ? என்ன விஷயம்? ” என்றேன்.

ஏதாவது பாம் வச்சு ரயிலுவெடிச்சுடுமோன்னு பயமா இருந்தது, அதனாலே ராத்திரி பூரா தூங்கமே இவங்களைவாட்ச் பண்ணிகிட்டே இருந்தேன்” என்றார் அந்த அறிவு ஜீவி.

இறங்கும் போதுஅந்த முஸ்லிம் சகோதரர் என்னிடம், ” உறவுக்காரங்க வெளிநாட்டிலிருந்துவாராங்க… அவங்களை அழச்சிட்டுபோக விமான நிலையம் போறோம்.போயிட்டு வர்றோம்அண்ணா” என்று கூறி விட்டுச் சென்றார். ‘அடப்பாவி, இதை முதல்லேயேசொல்லியிருக்கக் கூடாதா?” என்று சங்கடப் பட்டார் அந்த அறிவு ஜீவி நண்பர்.ப்ளைட்லே போகும்போது தாடி,தொப்பியோடு யாராவது ஒரு ஆள் நம் பக்கத்துலேஉக்காந்தாலே, ” நாம ஒழுங்கா போயி சேருவோமா”னு பயம் நிறைய பேருக்குவந்திருக்கிறது. இப்படி ஒரு தவறான கருத்தை, இஸ்லாமிய சமூகத்திற்குஇழைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய அநீதி என்றுதான் நான் நினைக்கிறேன்.

இனம்,மதம், மொழி, நாடு என்ற எல்லைகளையெல்லாம் கடந்தது பயங்கரவாதம். எந்தஒரு இனத்திற்கும் சொந்தமானதல்ல. அது உலகம் தழுவிய பிரச்சினை. ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பிரச்சினை.

எங்கெல்லாம் பேராசை இருக்கிறதோ…
எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ…
எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ…
அங்கெல்லாம் பாதிக்கப் பட்டவர்களின் உரிமைக்காக வெடித்துக்கிளம்புகின்ற வன்முறைக்குத்தான் பயகரவாதம் என்று மறுபெயர்வைத்திருக்கிறோம்.

ஒரு மண் புழுவைக் கூட ஊசியால் குத்தினால் அது வாலைத் தூக்கி அடிக்கிறது.அது ஒரு புழுவாக இருந்தாலும் கூட தன்னைத் துன்புறுத்துகின்ற அந்த ஊசியைதன் உயிர் போவதற்கு முன்னால், தனது சக்தியையெல்லாம் திரட்டி , அடித்துநொறுக்கப் போராடுகிறது. அது இயலுகிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.ஆனால்.. இந்த பயங்கர வாதத்திற்கு மாற்று மருந்து என்ன என்று கேட்டால்,அந்த மாற்று மருந்து இஸ்லாம்தான். ஒரு மனிதனுக்கு மூன்று உறவுகள்.

ஒன்று… தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்வது.

இரண்டு..தன்னை சுற்றிஇருப்பவர்களோடு ஏற்படுத்திக் கொள்வது.

மூன்று…அவனுக்கும் இறைவனுக்கும்உள்ள உறவு.
இதில் எதில் விரிசல் வந்தாலும் அங்கே பயங்கரவாதம் தோன்றிவிடுகிறது.மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பயங்கரவாதம் தோன்றி இருக்கிறது.விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பயங்கரவாதத்தின் காட்சிகள் நம் வீட்டிற்கேகொண்டு வந்து காட்டப் படுகிறது.

சமீபத்தில் நாம் பார்த்தது.. அமெரிக்க பயங்கரவாதம்.

தன்னுடைய நாட்டின்தேவைக்காக ஆப்கானிஸ்தான் மீதும்..ஈராக் மீதும் வீண் பழி சுமத்தி, அந்தநாடுகளின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்கா.ஆயிரக்கணக்கான லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதன்உச்ச கட்டமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசைனும் தூக்கிலேற்றப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.உலகம் முழுவதும் இன்று அமெரிக்காவின் பயங்கரவாதப் பிடியில் சிக்கிஇருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற மிகப்பெரியபயங்கரவாத நாடு அமெரிக்காதான்.

ஆனால், அமெரிக்க பயங்கரவாதத்தை எதிர்த்துபோரிடுகின்ற முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவது பெரும்கொடுமை.மதம் பயங்கரவாதம் புரிகிறதா என்று பார்த்தால்…பயங்கரவாதம் புரியும் மதம் கிறிஸ்தவ மதமாகத்தான் இருக்க வேண்டும்

சென்னையில் நடை பெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில்,
பீட்டர்அல்போன்ஸ் MLA அவர்கள் பேசியது.

நன்றி,
நமது முற்றம் -ஜூலை 2007

Source:
Via Mail