கஜினி முகம்மது ( தவறான கண்ணோட்டங்கள் )


கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார். “அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது. அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற்சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்பதாகும். ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினாறாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக்கைப் பற்றினார். பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார்.

உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப்பிடப்படுகிறார். அலெக்சாண்டர் சிந்து நதிக்கரை வரை வந்துவிட்டு கிரேக்க நாட்டிற்குத் திரும்பி விட்டார். நெப்போலியன் ரஷ்யர்களாலும் ஆங்கிலேயர்களாலும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!

அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன் ?
ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான்.

அவரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் குறிவைத்தார். அந்த மன்னரை வெற்றிகண்டு நகரைக் கைப்பற்றி, கோவில்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் – வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார். அவரது நோக்கம் கொள்ளையடிப்பதுதான் – ஆட்சியை நிலைநாட்டுவது அல்ல.

அவரது பதினேழு படையெடுப்புகள் பற்றிய விவரம்:

1. இந்தியாவின் எல்லை நகரங்கள் – கைபர் கணவாயை ஒட்டிய பகுதி – கி.பி.1000,
2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001,
3. பீரா (பாட்டியா) 1004,
4. மூல்டான் 1006,
5. நவாஸா 1007,
6. நாகர்க்கோட் 1008,
7. நாராயண் 1009,
8. மூல்டான் 1010,
9. நிந்துனா 1013,
10. தாணேசர் 1014,
11.லோஹ் கோட் 1015,
12. மதுரா மற்றும் கன்னோஜி 1018,
13. ராஹிப் 1021,
14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022,
15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023,
16. சோம்நாத் 1025,
17. ஜாட் மன்னர்கள் 1026.

கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி – நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான். சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர். குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது. இவர்கள் மட்டும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கஜினி முகம்மது நிஜமாகவே தோற்று ஓடி இருப்பார். ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. பேரறிஞர்களையும் புலவர் களையும் அவர் ஆதரித்தார். பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார். அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வரலாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார். கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது. இந்தியாவை ஆள்வதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

Source: (கீற்று கட்டுரையுன் ஒரு பகுதி)
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17529:2011-11-21-21-05-47

பண்டைய இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன.

இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோயிலைச்சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்?

பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளைடியப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான். இந்த அடிப்படையில்தான் கஜினி முகமது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.

எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோயில்களையோ இடித்ததில்லை.

Source:
http://amarx.org/?p=348

Advertisements

மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்..


Fishing

நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்….

சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா ? மேனேஜர் கேட்க,

நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன் என்றார் நம்மாளு.

அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்,

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய் ?

ஒருவரிடம் மட்டும்…

என்ன ஒருத்தர் மட்டுமா ?…
உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 லிருந்து 30 நபர்களிடம் சேல்ஸ் செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்.

சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய் ?

$10,12,347.64

ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா ? என்னென்ன விற்றாய் ?

முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.

பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள் ?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா என்று தெரியவில்லையே என்றார்.
நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4×4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன்”. இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்

என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய் ? மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் – ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்.

Source:
Via Mail

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்..!


man-crying

இது ஆண்களுக்கான கட்டுரை.

ஓர் ஆண் வாய் விட்டு அழுவது நல்லது என்று சொல்லப் போகும் கட்டுரை.

நம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், “பொட்டச்சி போல அழாதே” என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை.

டென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும். அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன. இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்; நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”

இவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார். பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.

 

கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.

கடைசி வகையும் முக்கியமானதும் தான் உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

 

மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது..

உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.

ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை.
ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.

ஆனால் சிலர் அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.

 

ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள்.

அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள்.

ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள்.

அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.

 

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா ?

தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள்.

அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.

அவ்வப்போது கண்ணீர் விடுவது நம் கண்களை கழுவி நமது வாழ்க்கையை நல்ல முறையில் பார்க்க உதவும்.

அதனால் … (தலைப்பைப் படிக்கவும்) ..!

Source:
Via Fb
Credits: SathishKumarChandran

தெரியாத கேள்வி..? புரியாத பதில்..!


உங்களுக்கு தெரியாத கேள்வி யாராவது கேட்டா… நீங்க என்ன பண்ணுவீங்க..

“தெரியாதுன்னு” சொல்வீங்க..! அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம அதை எப்படி சமாளிக்கறது..!!

” If You can’t Convince them..
Then.. Try to Confuse Them..! “

உதாரணம் :

Question No.1 :

அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..?

அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா வால், குட்டையா இருந்ததே அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும் கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு சொன்னா..
நாமளும் நமக்கு பிடிச்ச எதோ பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல கண்டுபிடிச்சவர் யாரு..?

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி சொன்னவரு கிரேக்க மேதை “ஆல்பர்டோ பெர்ணாண்டஸ்” .
Unfortunately அவரு பூமி Clock Wise-ல சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

Question No 3 :

உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..?

” அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! ”
( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..?

” நேத்திக்கா..? இன்னைக்கா..? இப்பவா..? ”

இப்படிதான் கேக்கற கேள்விக்கு.. டக் டக்னு பதில் சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு தெரியாத கேள்வியை கேக்கலாம்.. நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத பதிலை சொல்ல கூடாதா..?!

Source:
Via Fb