666 – பார்கோடு இரகசியம்


Bar Code

பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர் (Bernard Silver) மற்றும் நோர்மன் ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) ஆகியோரது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது நமதூர் சில்லரைக் கடைகளில் கிடைக்கும் அற்பமான தின்பண்டங்கள் முதல் பல்பொருள் அங்காடிகளின் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு குறியீட்டின் மூலமே முறைபடுத்தப் பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதில் என்ன பரம இரகசியம் என்று நினைக்கிறீர்களா? ஆம் இதையும் விட்டுவைக்கவில்லை இந்த இல்லுமனாட்டி லூசிஃபர்கள்.

பார்கோடுகளில் மேலிருந்து கீழாக அச்சிடப்பட்டிருக்கும் கோடுகளின் இறுதியில் அதற்கு ஈடான மதிப்பு எழுதப்பட்டிருக்கும். பார்கோடு மொழியில் இரட்டைக்கோடு என்பது 6 என்ற எண்ணைக் குறிக்கும். உலகில் அச்சிடப்பட்டிருக்கும் சர்வதேச பார்கோடுகள் அனைத்திலும் மூன்று முறை இந்த இரட்டைக்கோடுகள் வருவதைக் காணலாம், அதாவது 6- 6- 6. மேலும் இவ்வாறு மூன்றுமுறை அச்சிடப்பட்டிருக்கும் 6 என்ற எண்ணுக்குரிய கோடுகளில் அதன் மதிப்பெண்ணான 6 இடம்பெற்றிருக்காது.

இன்னும் அந்த மூன்று இரட்டைக்கோடுகளும் மற்ற கோடுகளின் அளவைவிட சற்று நீளமாக இருப்பதைக் காணலாம். (இதை உங்கள் அருகிலுள்ள பொருட்களின் பார்கோடுகளை பரிசோதித்துப்பாருங்கள் அல்லது கீழுள்ள படத்தை உற்றுநோக்குங்கள்.)

sixsixsix
ஆம் உலகின் அனைத்துப் பொருட்களிலும் அச்சிடப்பட்டிருக்கும் இந்த பார்கோடுகளின் வாயிலாக 666 என்ற எண் மறைமுகமாக பிரபலப்படுத்தப்படுகிறது.
அதுசரி இந்த 666 என்றால் என்ன என்கிறீர்களா?
அதன் பின்னனியில் பைபிள் வசனம் இருக்கிறது. ஆக்கத்தை இறுதிவரை பொறுமையாக படியுங்கள். அந்த பைபிள் வசனம் இதோ

பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. [Rev 13 : 11-18]

தெளிவாகச் சொல்வதென்றால் பைபிளின் கருத்துப்படி 666 என்ற எண் ஷைத்தானிய மிருகத்தையும், அந்திகிருஸ்துவான ( Anti-Christ ) தஜ்ஜாலையும் குறிக்கும்.

இந்த 666 என்ற எண்ணை பெரிய மாயாஜால வித்தையாக நம்பி பாப், ராக் மற்று ஜாஸ் இசைக் கச்சேரிகள் மூலம் தற்போது பிரபலப் படுத்தப்படுவதைக் காணலாம்.

secret-corporate-logos-america-online-bank-swastika-logo-hidden-logo-666-secret-logo-nazi-logo-nazi-hidden-666-logos-mark-of-the-beast-chip-obama-antichrist-all-seeing-eye-dfg


disney-666


MONSTER-ENERGY-DRINK-666

Video Links :
Video 1: 666-The Mark Of The Beast
Video 2: 666-The Mark Of The Beast
Video 3: 666-FOX Gematria Hand Signs And Back masking

For More Info:
http://www.ottrumai.net/SecretSociety
http://www.ottrumai.net/SecretSociety/6-BarCodeSecret666.htm

Source:
http://www.ottrumai.net/SecretSociety/6-BarCodeSecret666.htm

Advertisements