பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது ஆடையே காரணம்! – சர்வே தகவல்!


Hijab

பிரேசில் நாட்டில் நடந்த கருத்து கணிப்பு ஒன்றில் பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது உடல் தெரியமளவிற்கு அணியப்படும் ஆடையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பொருளாதார ஆராய்ச்சிக்கான அரசு அமைப்பு சர்வே ஒன்று நடத்தியது. கடந்த 2013ம் ஆண்டு மே மற்றும் ஜூனிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் 3,810 பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலும் பெண்கள். உடல் தெரியும் வகையில் ஆடை அணிவது கற்பழிப்பிற்கு வழிவகுக்கிறது என்று 65 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் தெரிந்திருந்தால் கற்பழிப்பு சம்பவங்கள் குறையும் என்று 58.5 சதவீதத்தினர் கூறியுள்ளனர். இந்த சர்வே முடிவு அந்நாட்டில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களது புகைப்படங்களை எடுத்து அதனை ஆன்லைனில் அனுப்பியுள்ளனர்.

சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களில் குறைந்த ஆடை அல்லது ஆடைகளின்றி, நான் கற்பழிக்கப் படுவதற்கு தகுதியானவளல்ல என்ற வாசகங்களை தாங்கியபடி நிற்கின்றனர். பேஸ்புக் வழியே கற்பழிப்புக்கு எதிரான ஆன்லைன் எதிர்ப்பு போராட்டத்தை பத்திரிக்கையாளரான நானா குயிரோஸ் நடத்தியுள்ளார்.இதற்கு பல வழிகளில் இருந்தும் அவருக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து அவர் கூறுகையில், ஆச்சரியப்பட தக்க விசயம் என்னவெனில், பிரேசில் விழாக்களில் ஆடைகளின்றி நடப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பிரசார போராட்டத்திற்கு ஆண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் கற்பழிப்புக்கு எதிரான வாசகங்களான கற்பழிப்பிற்கு எந்த பெண்ணும் தகுதியானவர் அல்ல என்பதை தெரிவிக்கும் வாசகங்களுடன் தங்களது புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த கருத்து கணிப்பு குறித்து பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் கூறும்போது, வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள அரசாங்கம் மற்றும் சமூகம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை ஆய்வு முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிரேசில் சமுதாயம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source:
http://www.aanthaireporter.com/பெண்கள்-கற்பழிக்கப்படுவ/

பெண்கள் சாமியார்களை நாடிச் செல்வதேன் ?


DR.Shalinii

பெண்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்ல ஒரு குடும்பப் பெண்ணுக்கு பிரச்சினைகள் எக்கச்சக்கமா இருக்கு.

கணவன், மனைவி பிரச்சினை, மாமியார், மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, குழந்தைகள வளர்க்கறதுல பிரச்சினை, பக்கத்துல வீட்ல பிரச்சினை.

இதனால் அவர்களுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடுது. நாம படிச்சிருந்தா, இப்படி ஆயிருக்காதே, இப்படி உட்கார்ந்திருக்க வேண்டியிருக்காதேன்னு அவங்களுக்குள்ள எக்கச்சக்கமான மன வருத்தங்கள், மன ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யுது.

இத பக்கத்து வீட்ல சொன்னா, யார் கிட்டயாவது சொல்லி மாட்டி விட்ருவாங்க. இல்ல, நம்மள பார்த்து சிரிப்பாங்க.

நம்மளப்பத்தி தாழ்வா நினைப்பாங்கன்னு எண்ணம் இருக்கலாம். இல்ல, வெளி ஆளுங்ககிட்ட சொன்னா அவங்க, அதை சொந்தக்காரங்ககிட்ட சொல்லிட்டா, நாளைக்கு அவங்க முகத்தில முழிக்கணுமே என்ற பயம் இருக்கலாம்.

அதனால, சாமியார்கிட்ட போறாங்க. அவங்க எதிர்பார்க்கிறது, தன்னை எந்தக் குறையும் சொல்லாம, இல்லம்மா கவலைப்படாதே; எல்லாம் சரியாய் போயிடுமுங்கிற ஆறுதலைத்தான். இந்த ஆறுதலை சாமியார் சரியா சொல்றதுனாலதான் அவங்ககிட்ட போறாங்க.

நம்ம இதிகாசங்கள்ல பாத்தீங்கன்னா குழந்தை எப்படி பொறக்கணும்னு வெட்ட வெளிச்சமா சொல்றதில் இராமாயணத்துல உதாரணம் எடுத்துக்கிட்டோம்னா, பாயாசம் கொடுத்தாங்க, அந்த பாயாசத்தை உட்கொண்டதுனால குழந்தை பொறந்ததுன்னு சொல்றாங்க. அவங்க பாயாசம்னு சொல்றது எதைங்கறத அறிவியல் தெரிஞ்சவங்களால புரிஞ்சிக்க முடியும்.

ஏன்? லட்டுன்னு சொல்லலே. ஏன்? பாயாசம்னு சொன்னாங்க. பாயாசம்ங்கிறது இன்னொரு விதமான மாற்று உபயோகமுள்ள வார்த்தைங்கிறது நமக்கு புரியுது. ஆனா, சாதாரண மனிதர்கள் என்ன நினைப்பாங்க.

உண்மையிலேயே சாமியார் பாயாசம் கொடுத்ததுனாலதான் குழந்தை பொறந்திச்சுன்னு நினைப்பாங்க.

இந்த மாதிரி நம்ம கலாச்சாரத்துல நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கறதுனால, இது அதிகமாக பெருகிகிட்டு இருக்கு.
அதுமட்டுமல்ல, குழந்தை இல்லாத பெண்ணை இந்த சமுதாயம் பார்க்கிற விதமும் அவங்கள டெஸ்பரோட்டாக்கி, எப்படியாவது குழந்தை பொறந்தா போதுங்கிற சூழ்நிலைக்கு தூண்டப்பட்டு, சரி, சாமியார் தவறாக நடந்து கொண்டாலும் பரவாயில்ல – இப்படியாவது குழந்தை பொறந்தா போதுமுங்கிற எண்ணமும் பெண்களுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.

குழந்தை இல்லாத பெண்களும் சாதாரண மனிதர்கள்தான் அவங்களுக்கும் வாழறதுக்கு எல்லா உரிமைகளும் இருக்கு.

எந்த தகுதியும் குறைஞ்சு போயிடலேங்கிற பரந்த மனப்பான்மை நமக்குள்ள இருந்ததுன்னா, குழந்தை இல்லாத பெண்களை நல்ல விதமா இன்னும் மரியாதையோட நாம நடத்துனும்னா இந்த மாதிரி ஒரு அவசர கதியில போயி எப்படியாவது குழந்தை பெத்துக்கணும்ங்கிற எண்ணம் இல்லாம போயிடும்.

– டாக்டர் ஷாலினி (மனநல மருத்துவர்).

Source:
Via Fb

“திரு’ – வாசகம்!


1.ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…

2.பேசுகிறாய்…“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று

பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில் பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3.ஒன்றுக்கும் குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!

பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4.வெறித்துப் பார்ப்பதில் வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5.எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

பக்கத்தில் வரும் பன்றியைப் பார்த்து
எந்தப் பன்றியும் நடுங்குவதில்லை,

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,

பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட பயப்படுகிறாள் பெண்.

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

6.விளக்குமாறு தொட்டு வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும் காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா, என் ஜட்டியை நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7.காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.

அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!

“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8.போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?

குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9.படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!

மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!

பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10.இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11.பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்
குத்துப் பாடல்கள்…

சின்னத் திரைகளில்
எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…

இலவச லேப்-டாப்பில்
விரியும் பாலியல் வலைகள்…

என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்
முதலாளித்துவ வியாபாரிகள்!

இத்தனைக்கும் காவலிருக்கும்
இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12.இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ
பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்
ஆணுறுப்புகளால் ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!

புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்
மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

– துரை. சண்முகம்

Source:
www.vinavu.com/2013/03/01/thiruvasakam-ds-kavithai/

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள் !


male-vs-female-brain

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும், அல்லது இரண்டிலும் இருக்காது! )

மொழி

பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

Source:
Via Fb

ஒரே பார்வையில் வீழ்வதில் ஆண்கள் முதலிடம் – ஆய்வில் தகவல்!


நியூயார்க்: பெண்களை விட காதல் வசப்படுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதிர் பால் இனத்தவரிடம் வெகு சீக்கிரம் வீழ்வது பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர். 48 சதவீதம் இளைஞர்கள் முதல் பார்வையிலேயே காதலில் வீழ்கின்றராம். ஆனால், பெண்களோ 28 சதவீதம் பேர் மட்டுமே முதல் பார்வையில் காதல் வசப்படுகின்றனர்.

புதிய நூற்றாண்டில் காதல் மற்றும் உறவுகள் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வில் இந்த சுவராஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. புதிய தலைமுறையினரின் மாறிய பாலியல் அணுகுமுறையும் , உறவுகளும் அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தபப்ட்டது.10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பாலியல், ஈர்ப்பு, இதர உடல்ரீதியான சிறப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 1300 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் சர்வேயில் பங்கேற்றவர்களிடம் அளிக்கப்பட்டது.

ஆய்வில் பங்கேற்ற 74 சதவீதம் பேரும் தங்களின் இணையின் மீது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.15 சதவீதம் பேர் சொந்த இணையை தவிர தவறான உறவையும் வைத்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதி ஆண்களும், 19 சதவீதம் பெண்களும் திருமணம் அல்லாத முறைகேடான உறவுகளில் விருப்பம் உள்ளவர்கள்.

கைகளை சேர்த்து பிடித்தல், செல்லப்பெயர் கூறி அழைத்தல், நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறுதல், முத்தமிடல் ஆகியன தனது இணையிடம் அன்பை வெளிப்படுத்த பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் வழிமுறைகளாம்.

தகவல் பரிமாற்றம் உறவை வலுப்படுத்துவதாகவும், இது குறையும் வேளையில் உறவு சீர்குலைவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source:
http://www.thoothuonline.com

பாரபட்சம் ஆகிப்போன நீதி! பத்திரிக்கையாளர் அருந்ததிராய்!


arundhati-roy

பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான அருந்ததிராய் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது, கற்பழிப்பு அது எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது, தண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்லா விஷயங்கள் போன்றும் இந்த விஷயத்திலும் நம் நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கற்பழித்து கொன்றனர். கர்ப்பிணி பெண்னை கற்பழித்து அவள் வயிற்ரை கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயுதத்தில் குத்தி நெருப்பில் இட்டு கொன்றனர். முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்து வெட்டியும், தீயிட்டும் கொளுத்தி கொன்றனர். இது விசயத்தில் ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?

காஷ்மீரில் அப்பாவி பெண்கள் இந்திய ராணுவத்தினரால் சீரழிக்கப்படும் போது அவர்களை தூக்கில் போட வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்படாதது ஏன்?

சத்திஸ்கரில் ஆதிவாசி பழங்குடி பெண் போலிசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய பெண் உறுப்பு கற்களால் சேதப்படுத்தப்பட்ட போது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?

கற்பழிக்கப்பட்ட பெண் எந்த ஜாதி மதம் அல்லது இனத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பாகுப்படில்லாமல் எதிர்க்கவேண்டும்.

Source:
http://www.sinthikkavum.net

தாயின் மனநிலையே சேயின் மனநிலை


baby-270x170

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

  • கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
  • குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.
  • மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.
  • எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.
  • அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
  • கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
  • அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
  • சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.
  • மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.
  • கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
  • தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.
  • அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

Source:
http://www.thoothuonline.com