வாழும் போது பிறரை மகிழ்வி..!


ஒரு வைத்திய சாலையில் இரண்டு கட்டில்கள்
ஒரு கட்டில் ஜன்னல் ஓரமாகவும் மற்றைய கட்டில் சற்று தள்ளியும் இருந்தது …

ஜன்னல் ஓரம் இருந்தவர் கட்டிலில் இருந்து எழுந்து இருப்பார் மற்றவரால் தலையை நிமிர்த்தி எழும்பமாட்டார் ..படுத்த படுக்கைதான் ..!

ஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை இவர் கூற மற்றவர் கேட்டு ரசிப்பார் …
ஒருநாள் ஜன்னலுக்கு வெளியே நீச்சல் தடாகம் இருப்பதாகவும் அதில் குழந்தைகள் குதித்து விளையாடுவதையும் வர்ணித்துக்கொண்டு இருந்தார் அதைக்கேட்ட மற்றவருக்கு ஆனந்தம் ..

மறுநாள் ஜன்னலுக்கு வெளியே மலையும் அதன் பசுமையையும் விளக்கினார் ..இப்படி நாளுக்கு ஒன்றை விளக்கியவர் ..மற்றவர் ஆனந்தத்தில் மிதப்பார் ……!

ஒருநாள் ஜன்னலோரம் இருந்தவர் இறந்து விட்டார் ….!

கவலைதாங்கமுடியாத மற்றவர் ஜன்னல் ஓரம்
தன் கட்டிலை போடும் படி கேட்க தாதிகள் அவ்வாறே ஜன்னல் ஓரம் கட்டிலை போட்டார்கள் ..

இதுவரை தன் தலையை அசைக்க முடியாமல் இருந்த இவர் ரெம்ப கஸ்டப்பட்டு தலையை தூக்கி
ஜன்னல் ஓரமாம வெளியே பார்த்தார் ….அதிர்ச்சி அடைந்தார் …ஆம் ..வெளியே மலையும் இல்லை
நீச்சல் தடாகமும் இல்லை ..மற்றைய கட்டிடத்தின் பெரும் சுவர் மட்டுமே இருந்தது …

தாதிமாரை அழைத்து இறந்தவர் இப்படியேல்லாம் சொன்னார் இங்கே அவர் சொன்ன ஒன்றுமே இல்லையே என்று கேட்டார் …?

தாதிகள் புன்னகை செய்துவிட்டு பெரியவரே அவருக்கு கண் தெரியாதே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றார்கள் ..

முதியோரின் கண்ணோரத்தில் கண்ணீர் வடிந்தது
தான் இருக்கும் காலம் வரை மற்றவர்களை மகிழ்வித்து வாழ்ந்த அந்த மாமனிதனை நினைத்தால் யாருக்குத்தான் கண்ணீர் வராது …?

எல்லோருக்கும் நெஞ்சு கணக்கும் …!

Source:
Via Fb

Advertisements

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்..!


man-crying

இது ஆண்களுக்கான கட்டுரை.

ஓர் ஆண் வாய் விட்டு அழுவது நல்லது என்று சொல்லப் போகும் கட்டுரை.

நம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், “பொட்டச்சி போல அழாதே” என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை.

டென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும். அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன. இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்; நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”

இவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார். பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.

 

கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.

கடைசி வகையும் முக்கியமானதும் தான் உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

 

மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது..

உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.

ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை.
ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.

ஆனால் சிலர் அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.

 

ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள்.

அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள்.

ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள்.

அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.

 

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா ?

தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள்.

அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.

அவ்வப்போது கண்ணீர் விடுவது நம் கண்களை கழுவி நமது வாழ்க்கையை நல்ல முறையில் பார்க்க உதவும்.

அதனால் … (தலைப்பைப் படிக்கவும்) ..!

Source:
Via Fb
Credits: SathishKumarChandran

மனபாரம் குறையனுமா அழுவது நல்லது..!


Cry

வாய்விட்டு சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கண்ணீர் விட்டு அழுவதும் மிகவும் ஆரோக்கியமானதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அழுவதன் மூலம் மனதில் உள்ள அழுத்தம் கண்ணீர் மூலம் வெளியேறிவிடுகிறது. கண்களில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. உடலுடன் உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணீர் வகைகள்:

சோகத்தில் அழுவது,
சந்தோஷத்தில் அழுவது,
எரிச்சலில் அழுவது,
உணர்ச்சி வசப்பட்டு அழுவது என கண்ணீர் பலவகைப்படும்.

மனிதர்களைப்போல விலங்குகளும் கண்ணீர் விட்டு அழுகின்றன. எனவே அழுவதற்காக வெட்கப்படத்தேவையில்லை. அழுகை என்பது ஆரோக்கியமானதே என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணீர் உருவாகக் காரணமான லாக்ரிமல் சுரப்பி காய்ந்து போனால் கண் உலர்ந்து விடும். கண்ணீரின் அளவு குறைந்து விடுவதால் கண்ணில் எரிச்சல் உணர்வு உண்டாகிறது. மண் விழுந்தது போன்ற கடுமையான எரிச்சலாகவும் இது இருக்கக்கூடும். வலி அதிகமாகும். கவனித்து சரி செய்து கொள்ளாமல் நீண்ட காலம் அலட்சியப்படுத்தினால் விழித்திரை யில் பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரலாம். அதனால் அடிக்கடி அழுவது கூட நல்லது தான். கண்ணீர் உண்டாகவில்லையென்றால் அதற்கேற்ப மருத்துவரை நாடவேண்டும்.

உலர்கண்களை தடுக்க:

கண்ணில் உள்ள மூன்று வெவ்வேறு படலங்களின் கூட்டு முயற்சிதான் கண்ணீர். இவற்றில் வெளிப்புறமாக உள்ள மெல்லிய படலம் அங்கு சுரக்கும் நீர் (அதாவது இமை யில் உள்ள லிபிட்) ஆவியாக மாறுவதைத் தடுக்கிறது. நடுப்படலமான லாக்ரிமல் சுரப்பி களில் நீர் சுரக்கிறது. கண்ணீரில் உள்ள உப்பும் அமிலமும் ஓர் அளவுக்குள் இருப்பதையும் இது உறுதி செய்துகொள்கிறது. கண் தொற்றுகளுக்குஎதிராகச் செயற்படும் சக்தியும் கண்ணீருக்கு உண்டு. உள்ளே இருக்கும் படலம் கண்ணீரை விழித்திரையோடு ஒட்டிக்கொள்ள வைக்கிறது. அதாவது கண்ணீர் சட்டென வெளியேறிவிடுவதில்லை. இந்த மூன்று படலங்களில் எது செயற்படா விட்டாலும் விழித்திரை உலர்ந்துவிடும்.

வயதாக ஆக இந்தப் படலங்களில் இயல்பாக உள்ள எண்ணெய் சுரப்பி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுகிறது. சிலவகை ஆண்டியாடிக் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போதும் இப்படி நேரலாம். கான்டாக்ட் லென்ஸ் அணியும் சிலருக்கு அதனாலேயே கண்களில் ஒவ்வாமை ஏற்படலாம். அதாவது அந்த லென்ஸ்கள் கண்ணீர்த் திவலைகளை உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே உலர்கண் கொண்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மனபாரம் குறையும்:

சந்தோசமென்றால் மகிழ்ச்சியை சிரிப்பாக வெளிப்படுத்துவதைப்போல, துக்கமென்றால் அழுது வெளிப்படுத்துங்கள்.
இதன் மூலம் மனபாரம் குறையும்,
ஆரோக்யம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Source:
Via Fb