கிணறு


Well

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு :–

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க ???

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகிவிடும்.
அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ..

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி, நீரூற்று இருக்கும். ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள். அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி, தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

Source:
Via Fb

Advertisements

போராளிகளின் வார்த்தைகள்


Clashes erupt between Palestinian protesters and Israeli soldiers
ஒரு நாள் நாங்கள் நிச்சயம் மரணிப்போம். ஆகவே மரணத்தை கண்டு நாங்கள் அஞ்சவில்லை..

ஒரு நாள் நீங்களும் மரணிக்கத்தான் போகிறீர்கள். ஆகவே உங்களை கண்டும் எங்களுக்கு அச்சமில்லை..

நாங்கள் அஞ்சுவது யாதெனில் மரணத்தருவாயில் எங்கள் கண்களில் மரணத்தின் பீதி இருக்க கூடாது என்பது தான்..

போராளிகளின் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்.

மரணத்தை கண்டு மாவீரர்கள் அஞ்சுவதில்லை..!!

Source:
Via Fb

 

குறட்டை (Snore)


Snore-causes

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.

குறட்டை எப்படி ஏற்படுகிறது?

குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும்.

நாக்கு, மேலண்ணம், தொண்டை சதை, மூக்கின் பின் பகுதி சதை இவை இறுக்கம் தளர்ந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த தளர்ச்சியால், இவை சுவாசக்குழாயை அழுத்துகின்றன. சுவாசக்குழாய் இதனால் சுருங்கி இருக்கும் போது வரும் காற்று சிறிது கஷ்டப்பட்டு தான் அதை கடக்க வேண்டி வரும்.

மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

குறட்டை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவு :

மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது.

இந்த பிரச்சினை உள்ளவர் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும்.
காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும்.

மல்லாந்து படுப்பதால் குறட்டை ஏன் அதிகமாகின்றது ?

நாம் தூங்கும் போது நாக்கு, தொண்டை, மேலண்ணம் போன்ற வாய்சதைகள் இறுக்கம் குறைந்து தளர்ந்து விடுகின்றன. மல்லாந்து படுத்தால் புவி ஈர்ப்பு சக்தியால், இந்த சதைகள், டான்ஸில்ஸ் இவையெல்லாம் பின்னோக்கி ஈர்க்கப்படுகின்றன. பின்னோக்கி சரியும் போது இந்த தசைகள் சுவாசக் குழாயை அழுத்துவதால் அதில் காற்றுத்தடை உண்டாகி, குறட்டை சப்தம் எழும்புகிறது.

குறட்டையை தவிர்க்க :

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் படுத்தால் குறட்டை விடுவது குறையும் அல்லது நிற்கும்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதால் குறட்டையை குறைக்கலாம்.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தாடை, தொண்டை, நாக்குகளுக்கான பிரத்யேக பயிற்சிகள், பிராணாயாமம் போன்ற சுவாசப்பயிற்சிகள் குறட்டையை குறைக்க உதவுகிறது.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 15 – 20 நிமிடம் கொப்பளித்து வந்தால், நாளடைவில் குறட்டைச் சத்தம் நின்றுவிடும். இதற்க்கு பெயர் ஆயில் புல்லிங் ( OIL PULLING ).

Source:
http://nerudal.com/nerudal.23796.html
http://manakkalayyampet.blogspot.in/2012/08/blog-post_6507.html
http://www.lekhabooks.com/health/352-kurattaiyai-virattu.html
http://news-amanushyam.blogspot.in/2013/02/blog-post_5801.html
http://oilpulling.com/

பனை மரம்


பனையை வெட்டினால்.. நதிகள் வறண்டு போகும்…!

palm_tree

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்…

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை… நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவேண்டும்.

Source:
Via Fb

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?


Child

குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது.

கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது (சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்).

புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.

நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.

பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

4, 5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்

தினமும் அரைமணி நேரம் தந்தை, நண்பனை போல உரையாடவேண்டும்.

Source:
Via Fb

பீட்டர் அல்போன்ஸ்: உரிமை மறுக்கப்பட்டவர்களின் போராட்டம் பயங்கரவாதமா ?


நெல்லையிலிருந்து சென்னைக்கு புகை வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தேன். வேத வியாக்கியானங்களில் விற்பன்னராகத் திகழ்ந்த அருமைநண்பர் ஒருவரும் என்னுடன் பயணம் செய்தார். தன்னை அறிவு ஜீவி என்று கூறிக்கொள்கின்ற அவர் தேவைக்கு அதிகமாகவே பேசக் கூடியவர்.

ட்ரைன் புறப்படும்நேரத்தில் ஒரு முஸ்லிம் சகோதரரும் பர்தா அணிந்த அவரது மனைவியும் நாங்கள்இருந்த பெட்டியில் வந்து ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகி விட்டது.அதிகமாக பேசக் கூடிய அந்த வேத விற்பன்னர் பேச்சை நிறுத்தி விட்டார்.அதோடு, அடிக்கடி தலையைத் தடவுவார்…அண்ணாந்து பார்ப்பார்…மன அமைதிஇல்லாததுபோல் தவித்தார்.” உடம்புக்கு சரியில்லையா?” என்று நான்கேட்டதற்கு ” அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று கூறிவிட்டார்.

அதிகாலையில் சென்னை வந்து சேர்ந்ததும் ” இரவெல்லாம் ஏன் தூங்கவில்லை?” என்று அவரிடம் கேட்டேன்.

“எப்படிய்யா தூக்கம் வரும்? இந்த பாயும் அவர்பொண்டாட்டியும் நம்ம கூட இருக்கும்போது தூக்கம் வருமா?” என்று திருப்பிக்கேட்டார்.

“ஏன் ? என்ன விஷயம்? ” என்றேன்.

ஏதாவது பாம் வச்சு ரயிலுவெடிச்சுடுமோன்னு பயமா இருந்தது, அதனாலே ராத்திரி பூரா தூங்கமே இவங்களைவாட்ச் பண்ணிகிட்டே இருந்தேன்” என்றார் அந்த அறிவு ஜீவி.

இறங்கும் போதுஅந்த முஸ்லிம் சகோதரர் என்னிடம், ” உறவுக்காரங்க வெளிநாட்டிலிருந்துவாராங்க… அவங்களை அழச்சிட்டுபோக விமான நிலையம் போறோம்.போயிட்டு வர்றோம்அண்ணா” என்று கூறி விட்டுச் சென்றார். ‘அடப்பாவி, இதை முதல்லேயேசொல்லியிருக்கக் கூடாதா?” என்று சங்கடப் பட்டார் அந்த அறிவு ஜீவி நண்பர்.ப்ளைட்லே போகும்போது தாடி,தொப்பியோடு யாராவது ஒரு ஆள் நம் பக்கத்துலேஉக்காந்தாலே, ” நாம ஒழுங்கா போயி சேருவோமா”னு பயம் நிறைய பேருக்குவந்திருக்கிறது. இப்படி ஒரு தவறான கருத்தை, இஸ்லாமிய சமூகத்திற்குஇழைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய அநீதி என்றுதான் நான் நினைக்கிறேன்.

இனம்,மதம், மொழி, நாடு என்ற எல்லைகளையெல்லாம் கடந்தது பயங்கரவாதம். எந்தஒரு இனத்திற்கும் சொந்தமானதல்ல. அது உலகம் தழுவிய பிரச்சினை. ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பிரச்சினை.

எங்கெல்லாம் பேராசை இருக்கிறதோ…
எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ…
எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ…
அங்கெல்லாம் பாதிக்கப் பட்டவர்களின் உரிமைக்காக வெடித்துக்கிளம்புகின்ற வன்முறைக்குத்தான் பயகரவாதம் என்று மறுபெயர்வைத்திருக்கிறோம்.

ஒரு மண் புழுவைக் கூட ஊசியால் குத்தினால் அது வாலைத் தூக்கி அடிக்கிறது.அது ஒரு புழுவாக இருந்தாலும் கூட தன்னைத் துன்புறுத்துகின்ற அந்த ஊசியைதன் உயிர் போவதற்கு முன்னால், தனது சக்தியையெல்லாம் திரட்டி , அடித்துநொறுக்கப் போராடுகிறது. அது இயலுகிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.ஆனால்.. இந்த பயங்கர வாதத்திற்கு மாற்று மருந்து என்ன என்று கேட்டால்,அந்த மாற்று மருந்து இஸ்லாம்தான். ஒரு மனிதனுக்கு மூன்று உறவுகள்.

ஒன்று… தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்வது.

இரண்டு..தன்னை சுற்றிஇருப்பவர்களோடு ஏற்படுத்திக் கொள்வது.

மூன்று…அவனுக்கும் இறைவனுக்கும்உள்ள உறவு.
இதில் எதில் விரிசல் வந்தாலும் அங்கே பயங்கரவாதம் தோன்றிவிடுகிறது.மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பயங்கரவாதம் தோன்றி இருக்கிறது.விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பயங்கரவாதத்தின் காட்சிகள் நம் வீட்டிற்கேகொண்டு வந்து காட்டப் படுகிறது.

சமீபத்தில் நாம் பார்த்தது.. அமெரிக்க பயங்கரவாதம்.

தன்னுடைய நாட்டின்தேவைக்காக ஆப்கானிஸ்தான் மீதும்..ஈராக் மீதும் வீண் பழி சுமத்தி, அந்தநாடுகளின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்கா.ஆயிரக்கணக்கான லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதன்உச்ச கட்டமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசைனும் தூக்கிலேற்றப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.உலகம் முழுவதும் இன்று அமெரிக்காவின் பயங்கரவாதப் பிடியில் சிக்கிஇருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற மிகப்பெரியபயங்கரவாத நாடு அமெரிக்காதான்.

ஆனால், அமெரிக்க பயங்கரவாதத்தை எதிர்த்துபோரிடுகின்ற முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவது பெரும்கொடுமை.மதம் பயங்கரவாதம் புரிகிறதா என்று பார்த்தால்…பயங்கரவாதம் புரியும் மதம் கிறிஸ்தவ மதமாகத்தான் இருக்க வேண்டும்

சென்னையில் நடை பெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில்,
பீட்டர்அல்போன்ஸ் MLA அவர்கள் பேசியது.

நன்றி,
நமது முற்றம் -ஜூலை 2007

Source:
Via Mail

வாழ்க்கை: வெற்றி தோல்வி


வெற்றி தோல்விகளையும், சாதனை – வேதனைகளையும் கண்டு துவண்டும், மயங்கியும் விடாது இருத்தல் அடுத்த கட்ட நடவடிக்கைக் கும் போராட்டத்துக்கும் பக்க பலமாக பெரிதும் இருக்கும்.


அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.

அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.

Gallery

ஆண்களுக்கு விந்தணுக்கள் வலிமைபெற ஒரு எளிமையான வழி

This gallery contains 1 photo.


இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும் விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு … Continue reading