கஜினி முகம்மது ( தவறான கண்ணோட்டங்கள் )

கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார். “அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது. அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற்சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்பதாகும். ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினாறாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக்கைப் பற்றினார். பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார்.

உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப்பிடப்படுகிறார். அலெக்சாண்டர் சிந்து நதிக்கரை வரை வந்துவிட்டு கிரேக்க நாட்டிற்குத் திரும்பி விட்டார். நெப்போலியன் ரஷ்யர்களாலும் ஆங்கிலேயர்களாலும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!

அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன் ?
ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான்.

அவரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் குறிவைத்தார். அந்த மன்னரை வெற்றிகண்டு நகரைக் கைப்பற்றி, கோவில்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் – வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார். அவரது நோக்கம் கொள்ளையடிப்பதுதான் – ஆட்சியை நிலைநாட்டுவது அல்ல.

அவரது பதினேழு படையெடுப்புகள் பற்றிய விவரம்:

1. இந்தியாவின் எல்லை நகரங்கள் – கைபர் கணவாயை ஒட்டிய பகுதி – கி.பி.1000,
2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001,
3. பீரா (பாட்டியா) 1004,
4. மூல்டான் 1006,
5. நவாஸா 1007,
6. நாகர்க்கோட் 1008,
7. நாராயண் 1009,
8. மூல்டான் 1010,
9. நிந்துனா 1013,
10. தாணேசர் 1014,
11.லோஹ் கோட் 1015,
12. மதுரா மற்றும் கன்னோஜி 1018,
13. ராஹிப் 1021,
14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022,
15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023,
16. சோம்நாத் 1025,
17. ஜாட் மன்னர்கள் 1026.

கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி – நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான். சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர். குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது. இவர்கள் மட்டும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கஜினி முகம்மது நிஜமாகவே தோற்று ஓடி இருப்பார். ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. பேரறிஞர்களையும் புலவர் களையும் அவர் ஆதரித்தார். பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார். அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வரலாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார். கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது. இந்தியாவை ஆள்வதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

Source: (கீற்று கட்டுரையுன் ஒரு பகுதி)
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17529:2011-11-21-21-05-47

பண்டைய இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன.

இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோயிலைச்சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்?

பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளைடியப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான். இந்த அடிப்படையில்தான் கஜினி முகமது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.

எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோயில்களையோ இடித்ததில்லை.

Source:
http://amarx.org/?p=348

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s