Gallery

என்ன அழகு

மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா
கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா
வஞ்சி அழகா வாய்வெடித்த பூவழகா
குஞ்சம் அழகா கூந்தல் மலரழகா – இல்லை
பஞ்சமில்லா மஞ்சம் அழகா மிஞ்சும் அழகு
மெருகூட்டும் அழகெதென்றால் – வெள்ளை
நெஞ்சம் அழகு நெடுநாட் காதலித்தும்
அஞ்சுதற்கு அஞ்சுகின்ற வஞ்சமில்லா
நெஞ்சமே அழகென்பேன் யான்.

சாதம் இடுகின்ற சந்தனக்கையழகா – அவள்
பாதம் படுகின்ற பக்குவப் புல்லழகா
நாதம் கொடுக்கின்ற நங்கை குரலழகா
பாதம் நோகாமல் பக்குவமாய் நடை நடந்து
தோதாய் வளர்ந்திருக்கும் கார்குழலை வாரிவிட்டு
கோதிப்பூ முடித்து காதலாள் காத்திருந்தால்
என்ன அழகு மின்னும் அழகு
எல்லாமே அழகென்பேன் நான்.

கவிஞர்: இந்திரன்
Source: http://www.lankasripoems.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s