Gallery

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

வாஷிங்டன்: அதிகம் ‘டாட்டூ’ (பச்சை) குத்திக் கொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் வரும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவு பழங்குடியினர் பயன்படுத்திய வார்த்தை ‘டட்டாவ்’. இதையும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக உச்சரித்து ‘டாட்டூ’ என ஆக்கியதில் உலகம் முழுவதும் பேஷன் ஆகிவிட்டது.

முன்பெல்லாம் மணிக்கட்டு ஏரியா, தோளில் கட்சித் தலைவர் பெயர், கட்சிக் கொடி, காதலி பெயரை பச்சை குத்திக்கொண்டனர். ஊரோரம் புங்க மரத்தடியில உட்கார்ந்து பத்து ரூபாய்க்கு குல சாமி, மனதுக்குப் பிடித்த மங்காத்தா, ஆத்தா அப்பன் வச்ச பெயர்னு கிராமத்துக்காரர்கள் பச்சை குத்திக் கொண்டனர். அப்போது அதன் விபரீதம் உணரப்படவில்லை. இப்போது லேசுபாசாக விழித்துக் கொண்டு கிராமத்துக்காரர்கள் பச்சையை மறந்து விட்டனர்.

ஆனால், பச்சை அப்படியே டாட்டூவாகி மேல்தட்டு நாகரிக நகரவாசிகளை ஒட்டி உறவாடுகிறது. கூச்ச நாச்சமேயில்லாமல் பின்பக்க இடுப்பை இழுத்து விரித்துக் காட்டி டாட்டூ போட்டுக் கொள்ளும் இளம்பெண்கள் சென்னையிலும் அதிகரித்து வருகின்றனர். உள்ளாடைகளில் மறையும் இடங்களைக்கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை. அதிகளவில் டாட்டூ குத்துவது ஆபத்து என்று தற்போது தெரியவந்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஒரு ஆய்வு. அமெரிக்கா, ஈரான், இத்தாலி, பிரேசில் உள்பட 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 124 ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரிப்போர்ட் தயார் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பது:

டாட்டூ போடும்போது தோல் ஒரு வினாடிக்கு 80 முதல் 150 முறை பஞ்சர் செய்யப்படுகிறது. மேலும் ரத்தம் உள்ளிட்ட உடல் திரவங்கள் மீது இக்கருவியின் ஊசிமுனை படுகிறது. கருவியை முறையாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பலருக்கும் பயன்படுத்தினால் கிருமிகள் பரவி நோய் ஏற்படும். டாட்டூவில் பயன்படுத்தப்படும் நிறமிகளும் பெரும்பாலும் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை. நோய்களை பரப்புவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு.

டாட்டூ அகற்றும்போதும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. டாட்டூ அகற்ற தெர்மல் இன்ஜுரி, டெர்மப்ரேஷன், க்ரயோதெரபி போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதிலும் அதிக கவனம், பாதுகாப்பு அவசியம். சுத்திகரிக்கப்படாத கருவிகளை பயன்படுத்தினால் எச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் வரலாம்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Source : dinakaran.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s